மேலும் அறிய

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை !

நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய  தடை விதிக்க உத்தரவிட வேண்டும் - என மனு.

மதுரை எலியார் பத்தி சுங்க சாவடி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டிய புறம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளிலும் சுங்கம் வசூலிக்க கூடாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நீதிமன்ற உத்தரவை மீறி சுங்கம் கட்டணம் வசூலிக்கக் கூடாது- நீதிபதிகள்.
 
உயர்நீதிமன்ற கிளையில் மனு
 
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த தேசிய  நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது மற்றும் நெடுஞ்சாலையின் center median-யில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும், ஆனால் தனியார் நிறுவனம் அதற்கான வசதிகளை செய்யப்படவில்லை.
 
கூடுதல் சுங்கச் சாவடி கட்டணம்
 
முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கடந்த 2023-ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையை பராமரிக்க 563.83 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செலவு செய்யவில்லை, மேலும் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக தொகையை தனியார் நிறுவனம் சுங்க சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தாலும் , மாதத்திற்கு 11 கோடி ரூபாய் சுங்க கட்டணம் மூலம் வசூல் செய்து, பராமரிப்பு பணிக்காக வெறும் 30 லட்சம் மட்டுமே செலவு செய்து வருகின்றது.
 
சுங்கக் கட்டணம் வசூல்
 
இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள்  மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய  தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
 
விசாரணை ஒத்திவைப்பு
 
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு முன்பு விசாரிக்கு வந்தது, அப்போது..,” மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரங்களை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு இரண்டு வார காலங்களுக்கு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
 
தலைப்பு செய்திகள்

மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget