Virat Kohli : ராஜா என்றும் ராஜா தான்! சச்சினை மிஞ்சும் கிங் கோலி! ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள்..
Virat Kohli: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி.சேசிங்கில் மட்டும் 28 சதங்களை விளாசியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது 51 வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் விராட் கோலி.
இந்தியா vs பாக் போட்டி:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் குரூப் ஏ-வின் மூன்றாவது போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் நல்ல தொடக்கம் தந்தனர், ஆனால் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதையும் படிங்க: IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
காப்பாற்றிய ரிஸ்வான் ஜோடி:
அதன் பின்னர் விளையாடிய சவுத் ஷகீல் மற்றும் கேப்டன் ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ரிஸ்வான் மோசமான ஷாட் ஆடி அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். அதன் பின்னர் விக்கெட்டுகள்மளமளவென் விழுந்தது. பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளையும், பாண்டியா 2 விக்கெட்டும், ராணா, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய வெற்றி: ‘
242 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல துவக்கத்தை தந்தனர். ரோகித் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க விராட் கோலி மற்றும் கில் ஜோடி சிறப்பாக விளையாடியது. கில் 46 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின்னர் ஸ்ரேயஸ் மற்றும் விராட் கோலி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: Hardik Pandya : ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி இவரா? வைரலாகும் புகைப்படம்
விராட் கோலி சதம்:
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது விராட் கோலி தனது 51வது சதத்தை பதிவு செய்ய 12 ரன்கள் தேவைப்பட்டது. அக்சர் பட்டேல் கோலி சிங்கிள் எடுத்து கொடுக்க கோலி பவுண்டரி அடித்து தனது 51 வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் அடித்தார். மேலும் விராட் கோலி தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி சதத்தை பதிவு செய்தார். சேசிங்கில் மட்டும் 28 சதங்களை விளாசியுள்ளார் விராட் கோலி.
51ST ODI HUNDRED BY KING KOHLI. 🐐
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2025
- 82nd international century, the greatest ever coming clutch at the big stage. 🇮🇳 pic.twitter.com/PEnq0TvTVI
ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்:
- விராட் கோலி - 51 சதங்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 49 சதங்கள்
- ரோஹித் சர்மா-32 சதங்கள்
- ரிக்கி பாண்டிங் -30 சதங்கள்
- சனத் ஜெயசூர்யா- 28 சதங்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

