மேலும் அறிய
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
எங்களுக்கும் திமுகவுக்கும் வரப்பு தகராறெல்லாம் கிடையாது. கொள்கை முரண்பாடுதான். நாங்கள் முன்பை விட இப்போது திடமாக இருக்கிறோம் - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள் தான் எஜமானர்கள் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டு பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில்,
அ.தி.மு.க., - பா.ஜ.க., கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு:
"நாங்கள் தான் எஜமானர்கள். யாருக்கும் நாங்கள் பயப்படவில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான். அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவதற்கு யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சூசகமாக சொல்லியுள்ளார்" என்றார்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதக வெளியேறுகிறதா? என்ற கேள்விக்கு:
"பிரேமலதா மதுரையின் மருமகள் தான்.அவரிடம் அதை கேளுங்கள்" என்றார்
அதிமுக கூட்டணி கணக்குகள் குறித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருத்து தொடர்பான கேள்விக்கு:
"திமுகவால் எங்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் வரப்பு தகராறெல்லாம் கிடையாது. கொள்கை முரண்பாடு தான். நாங்கள் முன்பை விட இப்போது திடமாக இருக்கிறோம்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பாம்பன் பாலம் வேலை 100% முடிந்தது.. திறப்பு விழா நடத்த தயக்கம் ஏன்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















