கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை
பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன் தொடங்கியது.
![கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை Karur 49th Year of Tirupukaz Padi Pooja at Vennamalai Murugan Temple TNN கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/04/71fa48be922e710d60ae8fea0ecefd601701673891795113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
கரூர் அருகே உள்ள வெண்ணமலை பாலசுபக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன் தொடங்கியது. ப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 49ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சியானது
கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு இருந்து முருகனின் வேல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மயில் தோகை காவடி ஆட்டத்துடன் தொடங்கி, நூற்றுக்கணக்கான பால்குடம், புனித தீர்த்தக்குடங்கள் சுமந்தபடி பக்தர்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க, கரூர் அடுத்த வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு வந்து திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
49 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு படிக்கும் தேங்காய், பழங்கள், வெற்றிலை கற்பூரத்துடன் வைத்து தீபாராதனை செய்யப்பட்டு, கீழிருந்து தொடங்கிய படிபூஜை மேல்படிகட்டு வரை சென்று சிறப்பாக நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களும், அன்னதானமும் நடைபெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)