Madurai: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஹிந்தி மொழி வழிகாட்டிகள் - மாவட்ட சுற்றுலா அலுவலர் தகவல்
”ஏற்கனவே ஆங்கிலம் மொழி கொண்டுவந்த நிலையில் வரவேற்பை கொடுத்தது. தற்போது ஹிந்தியும் நல்ல வரவேற்பை பெரும்” என்றார்.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் அதன் பெருமைகளை எடுத்துச் சொல்லும் வகையில் ஆங்கிலத்தை தொடர்ந்து, ஹிந்தி மொழி வழிகாட்டிகள் அமர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோயிலில் சுற்றுலாத்துறை சார்பில் ஹிந்தி மொழி வழிகாட்டிகள் நியமிக்கப்பட உள்ளனர். சுற்றுலாத் துறையின் கீழ் ஆங்கிலம், ஹிந்தி பேசத் தெரிந்த சுமார் 70 நபர்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக உள்ளனர். இவர்களில் 10 பேர் ஜெர்மன், ஸ்பானிஷ் உட்பட பல்வேறு மொழி பேசத்தெரிந்தவர்கள். வழிகாட்டி சுற்றுலா திட்டத்தின் கீழ் இரு மாதங்களுக்கு முன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் வெளிநாட்டு ஆங்கிலம் பேசும் சுற்றுலா வழிகாட்டிகள் 10 நபர்கள் நியமிக்கப்பட்டனர்.
கோயில் வரலாறு, திருவிளையாடல் புராணம், மதுரை பாரம்பரியம் குறித்து வழிகாட்டிகள் விளக்கி கூறுவதால் வெளிநாட்டவர்களிடம் வரவேற்பு உள்ளது. இதனால் சுழற்சி முறையில் 70 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. வட மாநில சுற்றுலா பயணிகளுக்கும் வரலாற்று தகவல்களை தெரிவிக்கும் வகையில் ஹிந்தி பேசும் வழிகாட்டிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவரிடம் கேட்ட போது,” மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு வாசல் அருகிலேயே அரசு சுற்றுலா தகவல் மையம் செயல்படுகிறது. ஆங்கில, ஹிந்தி மொழி வழிகாட்டி தேவையெனில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெறலாம். இதன் மூலம் சுற்றால பயணிகள் பல்வேறு தகவல்கள் பெற்றுக் கொள்ளமுடியும். கோயிலின் பெருமைகளை தெரிந்துகொள்ள முடியும். ஏற்கனவே ஆங்கிலம் மொழி கொண்டுவந்த நிலையில் வரவேற்பை கொடுத்தது. தற்போது ஹிந்தியும் நல்ல வரவேற்பை பெரும்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது’ - செல்லூர் ராஜூ
மேலும் செய்திகள் படிக்க - Madurai: மதுரை தெப்பக்குளத்தில் பாதுகாப்பு உடைகள் இன்றி படகு சவாரி - ஆபத்தை ஏற்படுத்தும் பயணம்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்