TNPSC: அடுத்த சிச்ஸரை அடித்த டிஎன்பிஎஸ்சி; 48 நாளிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
TNPSC Group 1B Exam Result: குரூப் 1 பி முதன்மைத் தேர்வில், தேர்ச்சி பெற்று நேர்காணலுக்குத் தேர்வான நபர்களின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி, 48 நாட்களிலேயே வெளியிட்டுள்ளது.

குரூப் 1 பி முதன்மைத் தேர்வு முடிவுகளை 48 வேலை நாட்களில் வெளியிட்டு, டிஎன்பிஎஸ்சி அசத்தி உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி இயக்குநர் பணியிடங்களை உள்ளடக்கிய குரூப் 1 பி முதன்மைத் தேர்வில், தேர்ச்சி பெற்று நேர்காணலுக்குத் தேர்வான நபர்களின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதில் உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) – 21 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
யாரெல்லாம் விண்ணப்பித்தனர்?
ஒரு பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு முடித்த பட்டம் அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டுகளுக்கும் குறையில்லாமல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அல்லது ப்ளீடர் பணி அல்லது இந்து சமய அறநிலையத் துறையில் தலைமை கிளார்க் அல்லது மேலாளர் அல்லது கண்காணிப்பாளர் அல்லது கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3 அல்லது கிரேட் 3 நிர்வாக அலுவலர் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகி முதன்மைத் தேர்வுகள் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 3 முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள் இன்று (பிப்.20) வெளியாகி உள்ளன. 48 நாட்களிலேயே இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/oraltest/05_2024_ACHRCE_OT_PUBLIST.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு செய்யப்பட்ட நபர்களின் எண்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இவர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த, தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அசல் சான்றிதழுடன் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

