Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
US-Ukraine-Russia: அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைனுக்கு எதிரான போக்கை எடுத்திருப்பது, அதிபர் ஜெலன்ஸ்கிவிற்க்கு மட்டும் அதிர்ச்சியில்லை, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு சர்வாதிகாரி, என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு, எப்போதும் எதிரான மனப்பான்மையை கொண்டிருக்கும் அமெரிக்கா, திடீரென ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராகவும் அமெரிக்க அதிபர் கருத்து தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் ஏற்படுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
பேச்சுவார்த்தையில் அமெரிக்கா:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றவுடன் , பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். மேலும், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப்போவதாக, அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் மீதான போரை தொடுத்தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போரானது , தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற சில நாட்களில் ரஷ்ய அதிபர் டிரம்ப்புடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் பேசினார்.
Also Read: வாங்க மோடி, வரேன் டிரம்ப்.! அன்பு மட்டுமல்ல அலர்ட்டாக இருந்த 2 தலைவர்கள்: டாப் 5 முடிவுகள்..
உக்ரைன் அதிபருக்கு எதிராக டிரம்ப்
கடந்த செவ்வாய்க்கிழமை டிரம்ப் பேசியதாவது,” உக்ரைன் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கான தலைவர்கள் இல்லை என்ற ஏக்கம் உள்ளது. இந்த போரை உக்ரைன் ஆரம்பித்திருக்க கூடாது. அந்த தருணத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க வேண்டும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு சர்வாதிகாரி, அவர் தேர்தலை சந்தித்து இருக்க வேண்டும். அவருடைய ஆட்சி காலம் முடிந்து விட்டது. தேர்தலில் , மக்களுக்கு அவருக்கு ஆதரவு இல்லை என கணிப்புகள் தெரிவிக்கின்றன என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், ரஷ்ய அதிபர் புதின் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

டிரம்ப்பின் இந்த கருத்திற்கு, பிரிட்டன், ஸ்பெயின் , ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்வினையை ஆற்றின, மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தன.
கோபத்தில் ஜெலன்ஸ்கி:
அப்போது, சவுதி அரேபியாவில் ரஷ்ய அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது உக்ரைனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது ஒருதலைபட்சமானது என கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த புதன்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, “ ரஷ்யாவில் இருந்து திரிக்கப்பட்ட செய்தியை வைத்துக்கொண்டு டிரம்ப் பேசுகிறார். டிரம்ப் , பொய்யான தகவலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரஷ்யா அதிபர் புதின் பக்கமா அல்லது அமைதியின் பக்கமா எனவும் ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

போர் நிறுத்தப்படுமா?
இந்நிலையில், டிரம்ப்பின் கருத்தால், ரஷ்யா அதிபர் புதின் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், அவரின் கருத்தை வரவேற்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
வழக்காமாக ரஷ்யா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அரசியல் ரீதியாக எதிர் மனப்பான்மையுடன் இருந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக , டிரம்ப் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிரான முடிவு எடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பின், ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த முன்னெடுக்கும் நடவடிக்கை, ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இருப்பதாக பார்க்கப்படும் நிலையில், உக்ரைனுக்கு பலவீனமானதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சியில் இருக்கிறார். டிரம்ப்பின் முடிவு , ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துமா அல்லது தீவிரமாக்குமா என வரும் நாட்களில் தெரிய வரும்.
Also Read: Pakistan Moon: நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் பாகிஸ்தான்: நல்ல பெயரை சொன்னால் 1 லட்சம் பரிசு!





















