மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது’ - செல்லூர் ராஜூ
ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.
![‘முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது’ - செல்லூர் ராஜூ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/6d11092b187ea13e0357f8bcde1beb2f1681040617212184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செல்லூர் ராஜூ
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில்,"அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்டவை நடந்திருக்காது. சோதனைக்கு வந்த ஐ.டி அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு..,க வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்ப சுற்றுலா போல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர்., போல வித விதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தி.மு.க., ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல.
![‘முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது’ - செல்லூர் ராஜூ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/9e74392dc404bfd78183f5fffb2447a51671705907961184_original.jpeg)
காவல்துறை டிஜிபி.,யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் திமுக பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத திமுக, இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்.
![‘முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது’ - செல்லூர் ராஜூ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/8c2af6928a7cb4b2d488e84c5a9dc1501671705384879184_original.jpeg)
ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். "தல" என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை."உண்மையான தல" தோனி ஜெயிக்க வேண்டும்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Palani Murugan temple: பழனி முருகன் கோயிலில் விரைவில் பக்தர்களுக்கு பிரேக் தரிசனம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Lottery: கேரளா லாட்டரி என்ற பெயரில் போலி டோக்கன் விற்பனை - சிவகங்கையில் 4 பேர் கைது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion