மேலும் அறிய

இந்தி எதிர்ப்பில் தமிழக அரசு காட்டும் அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் காட்டாதது ஏன்?- கொதிக்கும் ராமதாஸ்

தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழைப் படிக்காமலும், தமிழில் படிக்காமலும் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலை நிலவுகிறது.- ராமதாஸ்.

இந்தி எதிர்ப்பில் காட்டும் அதே அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன் என்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தாய்மொழியின் பெருமையையும், அதை வளர்க்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தக் கூடிய உலகத் தாய்மொழி நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அன்னை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைக்கும், குரல் கொடுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், நமது தாய்மொழியாம் தமிழை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வரும் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அன்னைத் தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

பாகிஸ்தானில் வங்கமொழி அவமதிக்கப்படுவதைக் கண்டித்தும், வங்க மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில், அந்த நாளை உலக தாய்மொழி நாளாக 1999வது ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. அப்போது முதல் 26ஆம் ஆண்டாக நடப்பாண்டும் உலகத் தாய்மொழி நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கு பங்களிக்காமல் இந்த நாளை கடைபிடிப்பது சற்றும் பொருளற்றது; பயனற்றது என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயப் பயிற்று மொழியாகவும், பாடமாகவும் அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய்மொழி நாளில் அன்னைத் தமிழை பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கடந்த 2023ஆம் ஆண்டு இதே நாளில் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ்க் கட்டாயப் பயிற்றுமொழி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘தமிழைத் தேடி...’ என்ற தலைப்பில் சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, குத்தாலம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 8 நாள்கள் தமிழன்னை சிலையுடன் பரப்புரை பயணம் மேற்கொண்டேன். ஆனால், அந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில்தான் அவல நிலை

உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழிதான் பயிற்று மொழியாக திகழ்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழைப் படிக்காமலும், தமிழில் படிக்காமலும் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

25 ஆண்டுகளுக்கு முன்பு 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து எட்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக்கி சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புக் கொண்ட தமிழக அரசு, ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்றுமொழியாக்கி அரசாணை பிறப்பித்தது.

 ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அந்த அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் 2000ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு 25 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை விசாரணைக்கு கொண்டு வருவதற்கோ அல்லது கட்டாயப் பயிற்றுமொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கோ தமிழக அரசு இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழ் பயிற்றுமொழிக்கான அரசியல் போராட்டமும், சட்டப் போராட்டமும் தொடங்கியது. ஆனால், அதன்பின் கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் இன்று வரை அன்னை தமிழுக்கு ஆட்சிப் பீடம் கிடைக்கவே இல்லை.

அதேபோல், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி 2006ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி 2015 & 16ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் தான் உள்ளது. ஆனால், அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து தமிழை கட்டாயப்பாடமாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சந்தர்ப்பவாத அரசியலா, தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகமா?

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதற்கு தமிழக அரசும், கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் சரியானது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது எந்த அளவுக்கு நியாயமானதோ, தமிழை கட்டாயப் பாடமாக்குவதும், பயிற்று மொழியாக்குவதும் அதை விட நியாயமானதும், முக்கியமானதும் ஆகும். தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழை பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியலாகவும், தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகமாகவும் தான் பார்க்கப்படும்.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழ் மொழி தொடர்பான வழக்குகளை மிக விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து, தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்படமாகவும்,   கட்டாயப் பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்! வெற்றி பெறுமா அன்புமணியின் திட்டம்?
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
Embed widget