கே.ஜி.எஃப் இயக்குநரின் அடுத்த படப்பிடிப்பு துவக்கம்...முதல் காட்சியே என்னா பிரம்மாண்டம்
சலார் படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது

பிரசாந்த் நீல்
கன்னட சினிமாவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அடையாளம் காட்டியவர் இயக்குநர் பிரசாந்த் நீல். நல்ல படங்கள் வெளியானாலும் மற்ற மொழி ரசிகர்கள் கன்னட சினிமா பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணம் என கே.ஜி.எஃப் படத்தை கூறலாம். கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாவது பாகம் பான் இந்திய வசூல் சாதனை படைத்தன. தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக நல்ல வெற்றிப்படமாக அமைந்தாலும் இப்படம் எதிர்பார்த்த அளவு மக்களால் பேசப்படவில்லை.
சலார் 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்தபடியாக சலார் 2 திரைப்படத்தை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர். மேலும் நடிகர் அஜித்துடன் பிரசாந்த் நீல் ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
The SOIL finally welcomes its REIGN to leave a MARK in the HISTORY books of Indian Cinema! 🔥🔥#NTRNeel shoot has officially begun.
— Mythri Movie Makers (@MythriOfficial) February 20, 2025
A whole new wave of ACTION & EUPHORIA is ready to grip the Masses 💥💥
MAN OF MASSES @tarak9999 #PrashanthNeel @MythriOfficial @NTRArtsOfficial… pic.twitter.com/yXZZy2AHrA
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றதும் முதற்கட்டமாக பிரம்மாண்டமான கலவர காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. ஜூனிஅர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த ஆண்டு தேவரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. யாஷ் , பிரபாஸ் போன்ற நடிகர்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைக் கொடுத்த பிரசாந்த் நீல் ஜூனியர் என்.டி.ஆருக்கு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

