IND vs BAN: மிரட்டும் ரோகித் பாய்ஸ்! இந்தியா - வங்கதேச போட்டியை நேரலையில் எப்படி பார்ப்பது?
INDvsBAN: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணியுடன் இந்தியா மோதும் முதல் போட்டியை எப்படி பார்ப்பது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் நாட்டில் நேற்று தொடங்கியது. முதல் போட்டி பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்திற்கும் நடைபெற்ற நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இந்திய அணிக்கான போட்டி இன்று தொடங்கியது.
எப்படி பார்ப்பது?
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்திய அணியும் வங்கதேசமும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இந்த போட்டியை தொலைக்காட்சியிலும் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டுகளிக்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டியை காணலாம். ஓடிடி தளத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் நேரலையில் பார்க்கலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், பல பயனர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
5 விக்கெட்டுகள் காலி:
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய வங்கதேசத்திற்கு ஷமி வில்லனாக மாறினார். முதல் ஓவரிலே அவர் செளமியா சர்காரை டக் அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் இளம் வீரர் ஹர்ஷித் ராணா கேப்டன் ஷாண்டோவை டக் அவுட்டாக்கினார்.
2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணிக்காக டன்ஷித் ஹாசன் - மெஹிதி ஹாசன் ஆட்டத்தை தொடர்ந்தனர். நிதானமாக ஆட முயற்சித்த மெஹிதி ஹாசனை ஷமி 5 ரன்னில் அவுட்டாககினார்.
மறுமுனையில் தொடக்க வீரர் டன்ஷித் ஹாசன் மட்டும் பவுண்டரிகளை விளாசி ரன் சேர்க்க முயற்சித்தார். ஆனால், அடுத்து வந்த சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் படேல் அவரை காலி செய்தார். வங்கதேச அணிக்காக சிறப்பாக ஆடிய டன்ஷித் ஹாசன் 25 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே அனுபவ வீரர் முஷ்பிகிர் ரஹீம் அவுட்டானார்.
35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் வங்கதேச அணிக்காக தெளகித் ஹிர்தோய் - ஜாகேர் அலி ஜோடி ஆடி வருகிறது. மைதானத்தில் சுழலும், வேகமும் நன்றாக எடுபட்டு வருவதால் வங்கதேச வீரர்கள் ரன்கள் எடுக்கத் தடுமாறி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

