மேலும் அறிய

EPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்

கட்சி, சின்னம், முதலமைச்சர் பதவியை இபிஎஸ் கையில் சேர்ப்பதற்காக அவரை விட ஒருவர் அதிமுகவில் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார். அவர் தான் இபிஎஸ்-ன் மகன் மிதுன் பழனிசாமி. இத்தனை ஆண்டுகளாக திரைமறைவில் அதிமுகவின் முக்கிய விஷயங்களை கண்ட்ரோலில் வைத்திருந்த மிதுன், நேரடி அரசியலுக்கு வர ரெடியாகிவிட்டாரா எnறு சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பின்னால் அவரது மகன் மிதுன் பழனிசாமியின் தலையீடு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. உட்கட்சி விவகாரங்களில் மிதுன் தலையிடவில்லை என்றாலும், தேர்தல் வியூகங்கள், சமூக வலைதள promotion-கள் போன்ற தொழில்நுட்ப ரீதியான விஷயங்களின் கண்ட்ரோல் மிதுன் கையில் இருந்தது. இதில் எல்லாம் இபிஎஸ்-க்கு அதிக ஈடுபாடு இல்லாததால், அதனை தனது மகன் பக்கமே திருப்பிவிட்டார். 

இளம் தலைமுறை மத்தியிலும் அதிமுகவை கொண்டு சேர்ப்பதில் மிதுனின் சோசியல் மீடியா ப்ரோமோஷன்கள் அதிமுகவுக்கு பலமாக அமைந்துள்ளது. 2021 தேர்தல் சமயத்தில் அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிடும் வகையில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்தது அதிமுக. ”வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற வார்த்தையை கேட்டாலே மு.க.ஸ்டாலின் அலறுகிறார்” என டார்கெட் செய்தார் இபிஎஸ். தேர்தலில் அதிமுகவின் அடையாளமாக இருந்த அந்த பிரச்சாரத்தின் மாஸ்டர் மைண்டாக இருந்தது மிதுன் பழனிசாமி தான். அதேபோல் கட்சியில் சீனியர்கள் மட்டுமே அதிகம் இருப்பதால் இளைஞர்களையும், புதுமுகங்களையும் களத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஐடியாவையும் அவரே இபிஎஸ்-க்கு கொடுத்துள்ளார். 

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் மிதுன். தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதற்காக பிரசாந்த் கிஷோரை மிதுன் பழனிசாமி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதோடு சேர்த்து தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் நெருக்கமானவர் என்பதால் தேர்தல் வியூகங்களில் அதிமுகவுக்கு உதவ மிதுன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். 

இந்தநிலையில் மிதுன் பழனிசாமி அரசியலில் ENTRY கொடுக்க வேண்டும் என அதிமுகவினரே இபிஎஸ்-யிடம் விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்குள் நுழைந்ததும் உதயநிதி vs விஜய் என களம் மாறிவிட்டதால் அதிமுக சார்பில் இளம் தலைவர் இருந்தால் தான் சரிபட்டு வரும் என சொல்லியுள்ளனர். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் என சிலர் மட்டுமே களத்தில் இருப்பதால் அடுத்தகட்ட தலைவர்கள் இல்லாதது கட்சிக்கு பெரும் சிக்கலாக மாறும் என்பதால், அதிமுகவின் முகமாக உதயநிதி, விஜய்க்கு போட்டியாக மிதுன் பழனிசாமியை இறக்கலாம் என சொல்லியுள்ளனர். 

வாரிசு அரசியலை குறிவைத்து திமுகவை ரவுண்டுகட்டி வரும் இபிஎஸ்-ம் தனது மகனை அரசியல் இருந்து ஓரங்கட்டி வைப்பதே கட்சிக்கு ப்ளஸாக இருக்கும் என நினைத்து வந்துள்ளார். தற்போது கட்சியினரே கேட்க ஆரம்பித்துவிட்டதால் மிதுன் பழனிசாமியை கொண்டு வரலாமா என இபிஎஸ்-ம் யோசிப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget