மேலும் அறிய
SAFF Championship: தெற்காசிய கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா..சாதனைகள் படைக்கும் சுனில் சேத்ரி!
2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றதோடு அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது இந்திய கால்பந்து அணி.

SAFF சாம்பியன்ஷிப்
1/6

14 ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டிராவா மைதானத்தில் நடந்து வருகிறது.
2/6

தற்போது லீக் போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இந்திய அணியின் கை சற்று ஓங்கி இருந்தாலும் முதல் பாதியில் இந்தியாவால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
3/6

இந்நிலையில் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் நிறைவுற்றது. அதை தொடர்ந்து நடைப்பெற்ற இரண்டாம் பாதியில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தது. 61 ஆவது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரியும் 70 ஆவது நிமிடத்தில் மகேஷ் சிங்கும் கோல் அடித்து அசத்தினர்.
4/6

பிறகு இரு அணிகளின் கோல் முயற்சியும் கைக்கொடுக்காத நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்த வெற்றிப் பெற்றதோடு அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது இந்திய கால்பந்து அணி.
5/6

இது வரை இந்த தொடரில் சுனில் சேத்ரி 4 கோல்கள் அடித்துள்ளார். மேலும், இதன் மூலம் அவரது சர்வதேச கோல் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
6/6

இது இந்திய அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். முதல் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்டிருந்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 25 Jun 2023 02:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement