மேலும் அறிய
IND vs SA: தீவிர பயிற்சியில் இந்திய அணி - தெ. ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட கோலி படை தயார்!

பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
1/7

உலகக்கோப்பை டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதாக அறிவிக்கப்பட்டது.
2/7

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்ட அணியுடன் வரும் 26-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.
3/7

இதற்காக, இந்திய அணி வீரர்கள் கடந்த டிசம்பர் 16-ம் தேதி விமானம் மூலம் தென்னாப்பிரிக்க புறப்பட்டு சென்றனர்.
4/7

காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா விலகியதால், அவருக்கு பதிலாக, பிரியாங்க் பஞ்சல் நியமிக்கப்பட்டார்.
5/7

இந்நிலையில், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கே.எல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
6/7

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ப்ரியாங்க் பஞ்சல், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்
7/7

காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்ஜன் நாக்வாஸ்வாலா.
Published at : 20 Dec 2021 07:33 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
பொது அறிவு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion