மேலும் அறிய

”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!

Ideas of India Summit 2025: மும்பையில் நடைபெற்று வரும் ABP Network-ன் Ideas of India நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு இது :

Ideas of India Summit 2025: மும்பையில் நடைபெறும் ‘Ideas of India – 2025’ நிகழ்ச்சியில் ABP Network-ன் தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேவ் சர்க்கார் பங்கேற்று பேசினார். Artificial Intelligence தொழில்நுட்பத்தின் அவசியம், அதனுடைய நோக்கம், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தன்னுடைய உரையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார் அதிதேப் சர்க்கார்.

வரவேற்ற சர்க்கார் ; புதிய எல்லைக்கு தயாராக அழைப்பு 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்ற ABP Network-ன் தலைமைச் செட்ய்தி ஆசிரியர், உலகம் புதிய எல்லையை நோக்கி பயணிப்பதற்கான ஒரு தொடக்கமாக இந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்றார். தற்போது உருவாகியிருக்கும் Artificial Intelligence என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் மூளையில், அவர்கள் அணுகும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது என்று. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு அறிவு சுரங்கமாக நமக்கு கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரச்னைகளை தீர்க்க சுலபமான வழி AI

மேலும், பல்வேறு பிரச்னைகளுக்கும் குழப்பத்திற்கும் தீர்வு காணக் கூடிய ஒரு தகவல் சுரங்கமாக Artificial Intelligence தொழில்நுட்பம் இருப்பதாகவும், தகவல் சுரங்கத்தை தாண்டி ஒரு நோயின் தன்மையை மதிப்பிடுவது முதல் விண்வெளி வரையிலான தரவுகளை தருவது வரை Artificial Intelligence தொழில்நுட்பத்தின் தற்போதைய பங்கு அளப்பறியது என்றும் விண்வெளி போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியாவிற்கு இந்த தொழில்நுட்பம் ஒரு பொக்கிஷம் போல கிடைத்திருப்பதாகவும் அதிதேப் சர்க்கார் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் AI

அதே மாதிரி, மனிதர்களின் செயல்பாடுகளை அடுத்தக் கட்டத்தை நோக்கி செலுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாறிவருவதாக குறிப்பிட்டுள்ள தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேவ் சர்க்கார், இந்த தொழில்நுட்பத்தால் எவ்வளவுக்கு எவ்வளவு பயன் உள்ளதோ அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் என்று நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

பயமும் இருக்கிறது – அதிதேப் சர்க்கார்

மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்றும், அரசியல், தனியார் அமைப்புகள் தொழில்நுட்பம் மூலம் தவறான தகவல்களை பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், பூமியின் குழப்பான அரசியல் விண்வெளி வரை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், பல பொருளாதாரங்கள் தங்கள் வயதான மக்களை காக்க போராடி வரும் நிலையில்,  செயற்கை நுண்ணறிவு மக்கள் நலனில் மட்டுமே செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் தவறான தகவல்களையும் அவதூறுகளையும் கெட்ட விஷயத்தை கண்டறியும் ஒரு கருவியாகவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்க வேண்டும் எனவும் தவறான தகவல்களை குடிமக்கள் Artificial Intelligence தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காண வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதிதேப் சர்க்கார் கேட்டுக்கொண்டுள்ளார்.

அற்புதத்தை எதிர்நோக்கி செல்ல வேண்டும்

விண்வெளிக்கான அடிப்படைக் கொள்கைகள் பூமியில் மற்றும் அதற்கு வெளியிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அதிதேப் சர்க்கார், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி,  நாடுகள் வயதடைவதைத் தவிர்த்து,  மக்கள் தங்களின் தொழில் வளர்ச்சி,  வாழ்நாள் நீட்டிப்பு போன்றவற்றை நீட்டிக்க பயன்படுத்திக் கொள்வதோடு,  அலுவலங்களை அற்புதமான இடமாக மாற்ற Artificial Intelligence தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தலைமைச் செய்தி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பு இருந்தால் அனைத்தும் சாத்தியமே – அதிதேப் சர்க்கார்

பொது அறிவோடு, ஒத்துழைப்பும் ஒருங்கிணைபும் கிடைத்தால், அப்படி அமைந்தால், நல்ல வழிகாட்டுதல் கிடைத்தால் Artificial Intelligence தொழில்நுட்பத்தை மனித குலம் பயனடையும் வகையில் நம்மால் செயல்பட வைக்க முடியும் என்று தெரிவித்துள்ள அதிதேப் சர்க்கார், இறுதியாக, மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று, அதுதான் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு ,புதிய எல்லைக்கு எடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget