மேலும் அறிய

Planet Parade 2025: ஒரே வாரம் தான்..! ஒரே நேர்க்கோட்டில் வரும் 7 கோள்கள் என்னென்ன? எங்கு? எப்போது? இந்தியாவில் பார்க்க முடியுமா?

Planet Parade 2025: சூரிய குடும்பத்தில் உள்ள 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அறிய வானியல் நிகழ்வு, வரும் பிப்ரவரி 28ம் தேதி நிகழ உள்ளது.

Planet Parade: சூரிய குடும்பத்தில் உள்ள 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அறிய வானியல் நிகழ்வை, எங்கு? எப்படி? காண முடியும் என்ற விவரங்களை இங்கே அறியலாம்.

கிரகண அணிவகுப்பு:

வானியல் ஆராய்ச்சி என்பதே பல அதிசயங்கள் நிறைந்தது தான். எளிதில் காண முடியாத, கணிக்க முடியாத பல நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மேலும் ஒரு ஆச்சரியமாக தான், பிப்ரவரி 28 ஆம் தேதி வானத்தில் ஒரு அரிய காட்சி காண கிடைக்க உள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் சூரிய மண்டலத்தின் அனைத்து கோள்களும் விண்வெளியில் ஒன்றாக அணிவகுத்துச் செல்வதைக் காணலாம். அதாவது அனைத்து கோள்களும் ஒரு நேர்கோட்டில் தெரியும். இந்த தனித்துவமான நிகழ்வை கிரக அணிவகுப்பு என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

15 ஆண்டுகால காத்திருப்பு:

விண்வெளியில் நடக்கும் இந்த நிகழ்வு மிகவும் அரிதானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அரிய தற்செயல் நிகழ்வைக் காணும் வாய்ப்பை இழந்துவிட்டால்,  அதனை மீண்டும் காண  15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிப்ரவரி 28 அன்று வானிலை தெளிவாக இருந்தால், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் தவிர அனைத்து கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை வெறும் கண்களால் பார்க்க முடியும். 

ஏன் சிறப்பு வாய்ந்தது?

நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அனைத்து கோள்களும் சூரியனின் ஒரு பக்கத்தில் ஒரு நேர்கோட்டில் சீரமைக்கப்படும்போது, ​​அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல் நமக்குத் தோன்றும், இது கிரக அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த கிரக அணிவகுப்பில் வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் சனி போன்ற கிரகங்களை மட்டுமே நம்மால் காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களைப் பார்க்க ஒரு தொலைநோக்கி தேவை. பூமியிலிருந்து அதிக தூரம் இருப்பதால், அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த கிரக அணிவகுப்பில் மூன்று முதல் எட்டு கிரகங்கள் இடம்பெறும். 

இந்தியாவில் கிரகங்களின் அணிவகுப்பை எங்கே காணலாம்?

இந்தக் காட்சியை இந்தியாவில் இருந்தபடி காண விரும்பினால், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் இதைக் காணலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அற்புதமான வானியல் நிகழ்வைக் காண, நகரத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு திறந்தவெளிக்குச் செல்ல வேண்டும், அங்கிருந்து இந்தக் காட்சி தெளிவாகத் தெரியும். வானிலை தெளிவாக இல்லை என்றால், இந்த அரிய தற்செயல் நிகழ்வை தொலைநோக்கியின் உதவியுடன் காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, கடந்த மாதம் ஜனவரி 21 முதல் 29 வரை வானத்தில் வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை இணைந்திருந்ததன் மூலம் தொடங்கிய கிரக அணிவகுப்பின் உச்சக்கட்டம் இன்று நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget