China Threatens: ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
சீன போர்க்கப்பல்கள் தங்கள் நாடுகளின் எல்லை அருகே நிற்பதால், இரண்டு நாடுகள் பதற்றத்தில் உள்ளன. அது எந்தெந்த நாடுகள் தெரியுமா.?

யாரையாவது பயமுறுத்தவில்லை என்றால் சீனாவிற்கு தூக்கம் வராது என்பதுபோல், அவ்வப்போது யாருக்காவது பதற்றத்தை ஏற்படுத்துவதே அந்நாட்டின் வேலையாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
நவீன போர்க்கப்பல்களை வைத்து அச்சுறுத்தும் சீனா
டாஸ்மான் கடற்பகுதியில் தனது அதிநவீன போர்க்கப்பல்களை நிறுத்தி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளை சீனா அச்சுறுத்தி வருகிறது. ரென்ஹாய் க்ளாஸ் க்ரூஸர் போர்க்கப்பலான ஜுன்யி மற்றும் விநியோக கப்பல்களை, ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்பகுதிக்கு கடந்த வாரம் கொண்டுவந்தது சீனா. இந்நிலையில், அக்கப்பல்கள் 150 கடல் மைல் தூரம் நகர்ந்து, சிட்னி கடற்பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், அவரை சீன கடல் எல்லையிலேயே உள்ளன. பயங்கரமான போர்க்கப்பல்களில் ஒன்று என அமெரிக்காவால் வர்ணிக்கப்படும் ஜுன்யி போர்க்கப்பல் மூலம், சீனா தனது கடற்படையின் வலிமையை பறைசாற்றுவதாக கருதப்படுகிறது. இந்த கப்பல்கள் நிற்கும் இடம், நியூசிலாந்தின் தெற்கு கடற்பகுதியிலும் வருகிறது.
கூட்டாக கண்காணிக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடல் எல்லைகளுக்கு அருகே, தங்களது எல்லையில், சீனா சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது, அவ்விறு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து, சீன போர்க்கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன.
சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா, சர்வதேக கடல் எல்லைகளையும், அந்தந்த நாடுகளின் எல்லைகளுக்கு உட்பட்டு அவரவர்களின் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை மதிப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில், எச்சரிக்கையாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
சீனா தனது போர்க்கப்பல்களை நியூசிலாந்தின் தெற்கு கடற்பகுதிக்கு அருகே நிறுத்தியிருப்பதை, சீனாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதுவதாகவும், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து தீவிரமாக சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இதே வேலையை செய்துவரும் சீனா, சில மாதங்களுக்கு முன், இலங்கையின் உதவியோடு, இந்திய கடல் எல்லைக்கு அருகே அதிநவீன சீன உளவுக்கப்பலை கொண்டு வந்து நிறுத்தியது நினைவிருக்கலாம். உலக நாடுகள் பலவும் சீனாவின் இத்தகைய அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு கண்டனங்களை தெரிவித்தாலும், அவர்கள் என்னவோ அதை நிறுத்துவதாக தெரியவில்லை. இது எங்கு போய் முடியும் என்றும் தெரியவில்லை.
இதையும் படியுங்கள்: 'Humanity Needs To Renew The Human Spirit': Watch ABP Network Chief Editor Atideb Sarkar's Full Speech
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

