பசியால் துடிப்பவர்களுக்கும், புளித்த ஏப்பத்தால் துடிப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது... லெப்ட் ரைட் வாங்கிய காவல் ஆய்வாளர்
சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நான்கு வழி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
நான்கு வழிச்சாலை
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் இடையிலான 194 கிலோ மீட்டர், துார நெடுஞ்சாலையை (45 ஏ), நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூபாய். 6,431 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில், விழுப்புரம் (ஜானகிபுரம்) - எம்.என்.குப்பம்; மங்கலம் முதல் கடலுார் குடிகாடு சிப்காட் - சிதம்பரம்; சீர்காழி சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் வரை என நான்கு பகுதிகளாக பிரித்து, 4 ஒப்பந்த தாரர்கள் மூலம் பணி நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இலக்கை கடந்து நீடிக்கும் பணி
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 4 பேட்ஜ் பணியில், சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான பணிகள் கடந்த 2020 ஜனவரி மாதம் துவங்கியது. பிரதமர் நரேந்திரமோடி இந்த பகுதி சாலை பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.இப்பணிகளை கடந்த 2022 அக்டோபர் மாதத்துடன் முடிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல பிரச்னையால் இப்பணியில் 50 சதவீதம் மட்டுமே தற்போது முடிந்துள்ளது.
Minister Anbil Mahesh: ’’மீண்டும் மொழிப்போரா? நாங்க சொல்றதை நீங்க கேளுங்க’’- அமைச்சர் அன்பில் ஆவேசம்
பணிகள் தடுத்து நிறுத்தும்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவிளாகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலத்தை கையகப்படுத்தி பத்து ஆண்டுகளாக இது வரை முழுமையான இழப்பீட்டுத்தொகை வழங்காததை கண்டித்து நெடுஞ்சாலை துறை சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முயன்றனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பாகசாலை காவல் ஆய்வாளர் கருணாகரன் (பொறுப்பு) விவசாயிகளிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து தகவறிந்து வந்த சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி விவசாயிகளிடையே பேச்சு வர்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசி நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க ஏற்படு செய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மனிதாபிமான முறையில் பேசிய காவல் ஆய்வாளர்
மேலும் பாகசாலை காவல் ஆய்வாளர் நான்கு வழி சாலை அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக போனில் தொடர்பு கொண்டு பாமர மக்கள் உரிய பணம் கொடுத்துவிட்டு வேலை தொடங்குங்கள் எனவும், பசியால் துடிப்பவர்களுக்கும், புளித்த ஏப்பத்தால் துடிப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது என விவசாயிகளுக்கு தீர்வு காணும் வகையில் அவர்களின் நிலையில் இருந்து பேசினார்.






















