மேலும் அறிய
Japan's Ex-Princess Mako: ”விடைகொடு சாமி விட்டு போகின்றேன்” - கணவருடன் அமெரிக்கா பறந்த முன்னாள் ஜப்பான் இளவரசி மகோ

கணவருடன் ஜப்பான் முன்னாள் இளவரசி மகோ
1/6

ஒரு சாமானியரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதால் அரச குடும்ப பட்டம் இனி தனக்கு வேண்டாம் என சொல்லியதோடு அரசு குடும்ப மரபுப்படி தனக்கு அளிக்கவிருந்த பல கோடி ரூபாயையும் நிராகரித்தவர் ஜப்பான் இளவரசி மகோ.
2/6

ஜப்பானின் பட்டத்து இளவரசரின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான மகோ அந்நாட்டை சேர்ந்த சாமானியரான கொமுரோவைப் பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார்.
3/6

ஒரு சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த 7000 கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.
4/6

இந்த பணத்தை வேண்டாம் என சொல்கிற முதல் இளவரசி மகோதான். இதற்குமுன் அந்த குடும்பத்தில் யாரும் அவ்வாறு சொல்லியதில்லை.
5/6

மகோ, ஒரு சாமானியரை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு வாரிசுகள் பிறந்தால் அவர்களும் அரசக் குடும்பத்தின் வாரிசுகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச கும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் மகோ பயன்படுத்த மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
6/6

இந்நிலையில், திருமண வாழ்க்கையை தொடங்க மகோவும், அவரது கணவரும் அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கின்றனர்.
Published at : 14 Nov 2021 04:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement