மேலும் அறிய

மாநகரம் முதல் கூலி வரை...லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சூப்பர் எது ? சுமார் எது?

மாநகரம் முதல் கூலி வரை லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கியுள்ள படங்களில் எந்த படத்திற்கு எத்தனையாவது இடம் என பார்க்கலாம்

இந்திய சினிமாவில் அதிகம் பேசப்படும் இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்துள்ளார். தொய்ந்து வந்த கமர்சியல் சினிமா பரப்பில் கதை சொல்லல் ரீதியாகவும் , திரையாக்க ரீதியாகவும் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர் லோகேஷ் கனகராஜ். மேலும் ஹாலிவுட் சினிமாவில் இருப்பது போல் தமிழில் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்கிற ஒரு கான்செப்டை அறிமுகம் செய்துள்ளார். வசூல் ரீதியாகவும் இவர் இயக்கிய படங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெறுகின்றன. கூலி உட்பட லோகேஷ் இதுவரை இயக்கிய 6 படங்களில் எந்த படம் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது என பார்க்கலாம். இந்த பட்டியல் விமர்சனப்பூர்வமான மதிப்பீடே தவிர  வசூலை மையப்படுத்தியது இல்லை. 

6. கூலி

மாநகரம் முதல் கூலி வரை...லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சூப்பர் எது ? சுமார் எது?

நீங்க நம்பவில்லை என்றாலும் இதுதான் நிஜம். இதுவரை லோகேஷ் இயக்கிய படங்களில் கூலி தான் மிக பலவீனமாக படமாக ரசிகர்களால் கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களை இதற்கு சுட்டிக்காட்டலாம். மற்ற படங்களைக் காட்டிலும் கூலியில் கமர்சியல் ரீதியாக அதிகப்படியான சமரசங்களை செய்திருக்கிறார் லோகேஷ். பாட்டு , நாயகியே இல்லாமல் படமெடுத்துக் கொண்டிருந்தவர் வனிகத்திற்காக ஒரு மசாலா பாடலை வைத்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களை சிறப்பாக கையாள்பவர் இப்படத்தில் ஷோ பீஸாக நடிகர்களை பயண்படுத்தி இருக்கிறார். குட்டி குட்டி டீடெயிலிங்கில் கதை சொல்வதே லோகேஷின் பலம். ஆனால் அதிகப்படியான லாஜிக் மீறல்கள் உள்ள படம் கூலி.  லோகேஷின் டிரேட்மார்க் விண்டேஜ் பாடல்களும் இந்த படத்தில் பெரிதாக வர்க் அவுட் ஆகவில்லை. அந்த வகையில் லோக்கியின் மிக பலவீனமான படைப்பாக கூலி படத்தை சொல்லலாம். 

5. லியோ

மாநகரம் முதல் கூலி வரை...லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சூப்பர் எது ? சுமார் எது?

அடுத்தடுத்து ஸ்டார்களின் படங்களுக்கு நகர்கையில் லோகேஷ் தனது தனித்துவத்தை இழப்பதை நாம் கவனிக்கலாம். அந்த வகையில் படத்தின் ரிலீஸ் தேதி தொடங்கி பல அழுத்தங்களை அவர் எதிர்கொண்ட படம் லியோ. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மலையளவிருந்தது.   ஹாலிவுட் திரைப்படமான history of Violence படத்தை வைத்து எடுக்கப்பட்டது லியோ . குறிப்பாக முதல் பாதி. ரசிகர்களை கவர்ந்த பகுதியும் இதுதான். இரண்டாம் பாதியில் விஜய்க்கு ஒரு ஃபிளாஷ்பேக் வைத்து ஒரு பாட்டு வைத்து ரசிகர்களை திருப்திபடுத்த நினைக்கையில் தான் இயக்குநர் தனது தனித்தன்மையை இழக்கிறார். 

4. மாஸ்டர்

மாநகரம் முதல் கூலி வரை...லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சூப்பர் எது ? சுமார் எது?

மாஸ்டர் படத்தைப் பொறுத்தவரை ரசிகர்களுக்கு படத்தைப் பற்றிய  முன்தீர்மானங்கள் ஏதும் இருக்கவில்லை. இப்படத்திற்கு முன் மாநகரம் , கைதி என இரு படங்களையே இயக்கியிருந்தார் லோகேஷ். அந்த வகையில் விஜயின் கதாபாத்திரத்தை லோகேஷ் எழுதியிருந்த விதம் இப்படத்திற்கு  ரசிகர்களிடையே ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பெற்று தந்தது. திரைக்கதையில் சொதப்பல்கள் இருந்தாலும் இப்படத்தின் ட்ரீட்மெண்ட் ரசிகர்களுக்கு புதிதானது. வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்ததும் இரு நாயகர்களையும் லோகேஷ் பேலன்ஸ் செய்திருந்த விதமும் பாராட்டிற்குரியது.

3. மாநகரம் 

மாநகரம் முதல் கூலி வரை...லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சூப்பர் எது ? சுமார் எது?

லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான படம் மாநகரம். சின்ன பட்ஜெட்டில் சின்ன நடிகர்களை வைத்து சுவாரஸ்யமான ஒரு த்ரில்லர் படம். வெவ்வேறு கதைகளை இயல்பாக இணைத்து கதை சொன்ன விதமும் , பார்வையாளர்களை எமோஷனலாக கனெக்ட் செய்த விதமும் இப்படத்தை அன்றைய சூழலில் இருந்து வெளியான மற்ற படங்களில் இருந்து தனித்து காட்டியது. 

2. விக்ரம்

மாநகரம் முதல் கூலி வரை...லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சூப்பர் எது ? சுமார் எது?

ரஜினி, விஜய் படங்களைப் போல் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் முழு படைப்பு சுதந்திரத்துடன் இயக்கிய படமாக தெரிவது விக்ரம் தான். கமல் , ஃபகத் ஃபாசில் , விஜய் சேதுபதி  என பல நட்சத்திரங்களை கதைக்குள் இயல்பாக கொண்டு வந்து ஒவ்வொருத்தரின் வழி கதை சொன்ன விதம்  ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. கூலி படத்தைப் போல் இப்படத்தில் முழுக்க முழுக்க ரஜினி இருந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் அவருக்கு இல்லை. இரண்டாம் பாதியில் தான் கமலின் காட்சிகளே தொடங்கும். கமலை முழுக்க முழுக்க மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டிய கட்டாயம் இல்லாததால் அவரது மீட்டருக்கு ஏற்ற வகையில் காட்சிகளை அமைத்திருந்தார். பெரிய பட்ஜெட் , பல்வேறு நடிகர்களை வைத்து இப்படியான ஒரு கதையை சாத்தியப்படுத்தியதற்காகவே இப்படத்திற்கு இரண்டாம் இடம் .

1.கைதி

மாநகரம் முதல் கூலி வரை...லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சூப்பர் எது ? சுமார் எது?

லோகேஷ் கனகராஜின் மாஸ்டர்பீஸ் என்றால் அது கைதி தான். ஒரு இரவுக்குள் நடக்கும் கதை , படத்தில் நாயகி இல்லை , பாடல்கள் இல்லை ஆனால் ஒரு நொடிகூட திரையில் இருந்து பார்வை விலகாமல் பார்வையாளர்களை உட்கார வைத்தார். தந்தைக்கும் மகளுக்குமான உறவை பற்றிய படம் என்றாலும் மிக குறைவான வசனங்களில் எமோஷனை கடத்திவிட்டு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு போதுமான நேரத்தை எடுத்துகொண்டு சொல்லப்பட்ட படம். அதே வழக்கமான டெம்பிளேட்டில் புதிதாகவும் அதே நேரத்தில் வனிக ரீதியான வெற்றிப்படத்தையும் கொடுக்க முடியும் என நிரூபித்தார் லோகேஷ். இப்படத்திற்கு பின்பே தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜை வலை வீசி தேடத் துவங்கினார்கள் என சொல்லலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget