கோலிவுட்டின் உண்மையான வசூல் மன்னன் யார்? முதல் நாளில் லியோ வசூலை முறியடித்ததா ரஜினியின் கூலி..?
Coolie Box Office : ரஜினிகாந்தின் கூலி படத்தின் முதல் நாள் வசூல் விஜயின் லியோ படத்தின் வசூலை மிஞ்சியதா என்பதைப் பார்க்கலாம்

சொதப்பிய லோகேஷ் ரஜினி கூட்டணி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ரஜினி கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. கோலிவுட்டின் முதல் 1000 கோடி படமாக கூலி இருக்கும் என பலர் எதிர்பார்த்த நிலையில் இரண்டாம் வாரத்தை கடப்பதே சந்தேகம் என்கிற நிலையே. அதிலும் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது படத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூலி படத்தின் முதல் நாள் வருத்து கணிப்புகளை சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படமே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்து வரும் நிலையில் இந்த சாதனையை கூலி முறியடிக்குமா என்பதைப் பார்க்கலாம்
கூலி முதல் நாள் வசூல்
இன்று மாலை காட்சிகளின் வசூலை சேர்த்து கூலி இந்தியாவில் ரூ 53 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. வேலை நாளில் படம் வெளியாகியுள்ள நிலையிலும் 81 சதவீதம் திரையரங்குகளில் கூட்டம் வந்துள்ளது. முதல் நாள் முடிவில் கூலி திரைப்படம் உலகளவில் ரூ 130 கோடி வசூல் செய்யும் என சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. விஜயின் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ 148 கோடி வசூலித்திருந்த நிலையில் கூலி இந்த சாதனையை முறியடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவே. படத்தின் உண்மையான வசூல் நிலவரங்களை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுகையில் தெரிந்துகொள்ளலாம்





















