மேலும் அறிய

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!

பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்த போது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவது அவசியம் அதனால் ஓபிஎஸ்-ஐ நமது கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்ற கருத்தை தமிழக பாஜகவினர் முன்வைத்த நிலையில், பி.எல்.சந்தோஷ் நிராகரித்ததாகவும் இதனை அறிந்த ஓபிஎஸ் அப்செட்டானதாகவும் தற்போது அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் அண்ணாமலை ஈடுபட்டுவருவதாகவும் சொல்கின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு, பாஜக தனக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தமிழ் நாடு வந்த போது அவரௌ சந்திக்க நேரம் கேட்டும் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் டெல்லி பாஜக தலைகள் அடிக்கடி ஓபிஎஸை  நேரடியாகவே அழைத்து பலமுறை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இப்போது அவரை திட்டமிட்டே பாஜக ஒதுக்கியுள்ளது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இச்சூழலில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது இல்லத்திலேயே சந்தித்தித்து பேசினார் ஓபிஎஸ். இதனால் அவர் திமுக கூட்டணியில் இணைய உள்ளார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால்,அவரை சமாதனபடுத்தி மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியை தொடங்கியது. 

இதனிடையே சென்னை வந்த பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷிடம் தமிழக பாஜகவினர் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவது அவசியம் அதனால் ஓபிஎஸ்-ஐ நமது கூட்டணிக்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், பி.எல்.சந்தோஷ் அதனை நிராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த ஓபிஎஸ் கடும் அதிருப்திக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் தான் தற்போது அண்ணாமலையை வைத்து ஓபிஎஸை சமாதனப்படுத்தும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி விட்டீர்கள் இனி அவர்களின் சகவாசமே வேண்டாம் என்று திமுக ஓபிஎஸ்-யிடம் கூறிவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே குழப்பிப்போய் இருக்கும் ஓபிஎஸ் மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு காத்திருப்பதா இல்லை திமுக பக்கமே ஒதுங்கி விடலாம என்ற யோசனையில் இருப்பதக சொல்கின்றனர் ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவர்கள்.

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
தேசத்தைக் காத்தோருக்கு சிறப்பு கவனிப்பு! மனுக்களைக் கொடுத்து பயன் பெற முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு!  
தேசத்தைக் காத்தோருக்கு சிறப்பு கவனிப்பு! மனுக்களைக் கொடுத்து பயன் பெற முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு!  

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget