Top Stories
See More-
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
-
Independence Day 2025: இப்படியும் நடந்து இருக்கா? இந்தியா & பாகிஸ்தான் அணிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்!
-
சுதந்திர தின விடுமுறை: 3 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம்! குறையின்றி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்
Advertisement
Indian Independence Day
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியர்களுக்கு மிகவும் புனிதமான நாளாகும். உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த இந்த நாள் ஓர் வாய்ப்பை உருவாக்கி தருகிறது. தேசிய விடுமுறை தினம் என்பதால், கொடியேற்ற விழாவுக்கு பின், அனைத்து அரசாங்க அலுவலகங்கள் மூடப்படும்.
வணிக கடைகள் கூட மூடப்பட்டிருக்கலாம் அல்லது, வேலை நேரம் குறைக்கப்படலாம். பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் தேச பக்தி திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் உரை நிகழ்த்துவார். டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்துவிட்டு இந்திய பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். மாநில மற்றும் தேசிய அளவில் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சில இடங்களில், சுதந்திர தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது.
Independence Day Quiz
Independence Day Wishes
Advertisement













