மேலும் அறிய

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

TN 10th Supplementary Revaluation Retotalling 2025: பத்தாம்‌ வகுப்பு துணை பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த தேர்வர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை இன்று முதல்‌ பெறலாம்.

பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வு விடைத் தாட்களின்‌ நகலினை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ளது. அதேபோல மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள், தவறு கண்டவர்கள் மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வு விடைத் தாட்களின்‌ நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளல்‌ சம்பந்தமாகவும் மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்‌ குறித்தும் முக்கிய அறிவிப்பை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ மேலும் தெரிவித்து உள்ளதாவது:

ஜூலை- 2025 பத்தாம்‌ வகுப்பு துணை பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த தேர்வர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை இன்று - 14.08.2025 (வியாழுக்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ பெறலாம்.

எப்படி?

  • தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ செல்லவும்.
  • அதில், Notification பகுதியை க்ளிக் செய்யவும்.
  • உடன்‌ "SSLC JULY- 2025 - Answer Script Scanned Copy Download” என்ற வாசகத்தினை க்ளிக் செய்யவும்.
  • செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது பதிவெண் மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மறு கூட்டல்‌அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விடைத்தாட்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறு கூட்டல்‌அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ "Application for Retotalling/Revaluation" என்ற தலைப்பினை க்ளிக் செய்ய வேண்டும்.

க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌ இவ்விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து 18.08.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல்‌ 19.08.2025 (செவ்வாய்கிழமை) மாலை ௧5.00 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ Press Release என்பதை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்‌.

தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்‌ தொகையைப்‌ பணமாகச் செலுத்த வேண்டும்‌.

மறுமதிப்பீடு

பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505/-

மறுகூட்டல்‌

பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget