மேலும் அறிய

SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கில், ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்கவும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவைகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிடவும், ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்கவும், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளின் உத்தரவு என்ன.?

இந்த வாரத்தின் தொடக்கத்தில், பீகார் வாக்காளர் சிறப்பு துவிர திருத்தம் தொடர்பான வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், சட்டப்படி, தங்களால் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீக்கப்பட்டவர்களின் பெயர்களை இணையத்தில் வெளியிடலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தரியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சில முடிவுகளை எடுக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். அதோடு, இது தொடர்பான அறிக்கையை, வரும் 22-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர்.

மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என கூறிய நீதிபதிகள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பணிகள் வாக்காளர்களுக்கு வசதியாகவும், சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - வழக்கு தொடர்ந்த எதிர்க்கட்சிகள்

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, பீகாரில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திரத்தத்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் தான் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இனிடையே, மக்களவை தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்ற, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக, ஆதாரங்களுடன் கடந்த வாரம் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், அந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget