மேலும் அறிய
Siddaramaiah wishes ISRO : விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேலுக்கு வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா!
சந்திரயான் 3 விண்கலத்தின் முழு கட்டுப்பாட்டையும் சிறப்பாக மேற்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்று வாழ்த்தினார் கர்நாடக முதலமைச்சர்.

சித்தராமையா
1/7

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது
2/7

அதன்பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது. இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. சந்திரயான் முழு கட்டுப்பாட்டையும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
3/7

இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அந்தரிக்ஷ் பவனில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துளார்.
4/7

இஸ்ரோ மையத்தின் தலைமை அதிகாரி சோம்நாத்திற்கு கர்நாடகா முறைப்படி தலைப்பாகை அணிவித்து கவுரவித்துள்ளார்.
5/7

அதேபோல் சந்திரயான் 3 திட்டத்தின், இயக்குனராகவும், முக்கிய மூளையாகவும் இருந்து செயல்பட்ட தமிழ்நாட்டின் விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேலுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அவரின் வாழ்த்தை தெரிவித்தார்.
6/7

இஸ்ரோ மையத்தின் விஞ்ஞானிகள் அங்குள்ள செயல்பாடுகளை முதலமைச்சர் சித்தராமையாவுக்கு விளக்கினார்கள்
7/7

இறுதியாக இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
Published at : 24 Aug 2023 01:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion