V. K. Pandian: "வந்துட்டேன்னு சொல்லு” ஒடிசா அரசியலில் மீண்டும்.. VK பாண்டியன் தம்பதி
கடந்த 10 ஆண்டுகளாக ஒடிச அரசியலில் கோலோச்சி வந்த தமிழ் நாட்டைச்சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகை பாண்டியனை பாஜக திட்டமிட்டு வீழ்த்தியதாக கூறப்பட்ட நிலையில், பாஜகவிற்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு அவர் தனது மனைவியுடன் தயாராகி வருவதாக ஒடிசா அரசியலில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
ஒடிசா அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியக விளங்கி வந்த பாண்டியன் தமிழ் நாட்டில் உள்ள மேலூரில் பிறந்த வளர்ந்தவர். IAS- அதிகாரியன இவர் தன்னுடைய பணி காரணமாக ஒடிசாவிற்கு சென்றார். தமிழனாக பிறந்து வளர்ந்தலும் ஒடிசாவின் மீதான இவரது அன்பிற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தன்னுடன் சேர்ந்து படித்த ஒடிசா பெண்ணான சுஜாதா உடனான காதல்...மற்றொன்று IAS அதிகாரியாக ஒடிசா சென்ற பாண்டியன் மீது அம்மக்கள் காட்டிய அன்பு...கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு IAS அதிகாரியாக பொறுப்பேற்ற பாண்டியன் ஒடிசாவின் மருமகனாகவும் ஆனர்...
இவரது செயல்பாடுகள் மக்களிடம் மட்டுமின்று அப்போது ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கையும் பெரிதும் ஈர்த்தது. தன்னுடைய அசாத்திய திறமையால் மிக விரைவில் ஒடிசா முதலமைச்சரின் தனிச்செயலாளராக உயர்ந்தார் பாண்டியன். அதோடு நவீன் பட்நாயக் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பின் நின்ற இவர் மீது நவீன் பட்நாயக்கிற்கு நம்பிக்கை ஏற்பட... மறுபுறம் பாண்டியனின் மனைவி சுஜாதாவும் மக்களிடம் நல்ல பெயரை பெற்றதால் அரசியின் முக்கிய துறைகளில் இந்த தம்பதியை அமர்த்தினார் நவீன் பட்நாயக்.
மறுபுறம் ஒடிசாவின் சூப்பர் முதல்வர் , சோடோ சிஎம் என்றெல்லம் எதிர்கட்சிகள் பாண்டியன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கின. தொடர்ந்து ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்தது. தனக்கு பிறகு கட்சியின் தலைவராக சுஜாதா பாண்டியனை நியமிக்க அவர் விரும்பினார் என்றும் கூறப்படுகிறது. கட்சிக்குள் பாண்டியனையே அடுத்த தலைவரக அறிவிக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
பாண்டியனை ஒரு தமிழனாக பார்க்காமல் தங்களது மா நிலத்தின் மருமகனாகவே பார்க்க ஆரம்பித்தனர் ஒடிசா மக்கள். பாண்டியனின் மனைவி சுஜாதா ஒடிசா பெண்ணாக இருந்தாலும் பாண்டியன் மீது ஒடிசா மக்கள் வைத்திருக்கும் அன்பை பார்த்து பாண்டியனையே களத்தில் இறக்கி விடலாம் என்று முடிவெடுத்தார் பட் நாயக். இதனைத் தொடர்ந்து அரசுப் பணியை ரஜினாம செய்து விட்டு பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் பாண்டியன்..
2024 ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முன்னொடுப்புகளை பாண்டியனே எடுக்க மறுபுறம் ஒரு தமிழனை ஒடிசாவின் முதலமைச்சர் ஆக்க போகிறீர்களா என்ற விசம பிரச்சாரத்தை கையில் எடுத்தது பாஜக பட் நாயக்கனின் ஆட்சியியும் வீழ்த்தியது.
பிரதமர் மோடி , அமித்ஷா உள்ளிட்டோர் ஒடிசா ஜெகன்னாதர் கோவில் சாவி தமிழ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது என்று பிரச்சாரம் செய்தார்கள்.. பின்னர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார் பாண்டியன். அந்த சமயத்தில் அவரது மனைவி சுஜாதாவும் 6 மாத விடுமுறையில் சென்றார். இச்சூழலில் தான் சுஜாதா விருப்ப ஓய்வை கேட்டுப்பெற்றுள்ளார். தற்போது ஒடிசா அரசியலில் இது தான் பேசு பொருளாகி உள்ளது.
கொஞ்ச நாட்கள் கழித்து பிஜு ஜனதா தளத்தில் சுஜாத இணைவர் என்று கூறப்படுகிறது. இச்சூழலில் சுஜாதவை முன்னிலை படுத்தியும் அவரது கணவர் பாண்டியனை பின்னணியில் வைத்து நவீன் பட் நாயக் காய் நகர்த்துவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது பாஜகவின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படும் நிலையில் இதையே காரணமாக வைத்து பாண்டியன் சுஜாதா தம்பதியை பிஜு ஜனதா தளத்தின் அரசியல் வாரிசாக நவீன் பட்நாயக் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.





















