மேலும் அறிய
PM Modi at Maha Kumbh: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி!
PM Modi at Maha Kumbh: மகா கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற புகைப்பட தொகுப்பு இது.
திரிவேணி சங்கமம் - பிரதமர் நரேந்திர மோடி
1/8

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்வில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான பகதர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். உலக தலைவர்களும் கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.
2/8

பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. அந்நிகழ்வில் ஏற்கனவே அமிஷ் ஷா உள்ளிட்டவர்கள் நீராடினர். பிரதமர் நரேந்திர மோடி நீராடினார்.
3/8

திரிவேணி சங்கமத்தில் நரேந்திர மோடி நீராடிய காட்சி .உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கங்கை ஆற்றில் படகில் சென்று பார்வையிட்டார்.
4/8

படகில் திரிவேணி சங்கமத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி காவி சட்டை அணிந்து திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினார்.
5/8

ருத்ராட்ச மாலையுடன் கடவுளை வணங்கி புனித நீராடினார். பிறகும், அவர் அனுமான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
6/8

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில் இங்கு வந்து புனித நீராடியது பாக்யனாக கருதுகிறேன். தெய்வீக உணர்வை அடைந்தேன். கங்கை தாய் அனைவருக்கும் ஆரோக்கியமான, அமைதியா வாழ்வை அருளட்டும். என்று பத்விட்டுள்ளார்.
7/8

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் 10 கோடி பேர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். இந்த ஆண்டு, ரூ.6,382 கோடி ரூபாய் செலவில் 40 கோடி பக்தர்கள் புனித நீராடுவதில் பங்கேற்பார்கள் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது,
8/8

பூஜை செய்து வழிபடும் பிரதமர் நரேந்திர மோடி..
Published at : 05 Feb 2025 03:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















