மேலும் அறிய

Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?

Nidhi Tewari PM Modi Private Secretary: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளராக ஐஎஃப்எஸ் அதிகாரியான நிதி திவேரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Nidhi Tewari PM Modi Private Secretary: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச்செயலாளராக நிதி திவேரி நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎஃப்எஸ் அதிகாரியான இவர் பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி யார்?

பிரதமரின் புதிய தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதி திவேரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் அந்த மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உள்ள மேமுர்கஞ்ச்சில் பிறந்தவர். 2014ம் ஆண்டு பிரதமர் மோடி வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதியின் கீழ இந்த பகுதி வருகிறது. 

இவர் ஐஎஃப்எஸ் ஆவதற்கு முன்பு வாராணாசியில் வணிகவரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தார். பின்னர், 2014ம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 96வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார். 

பணி அனுபவம்:

தற்போது பிரதமரின் தனிச்செயலாளராக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்த பணியில் இவர் பணியாற்றி வருகிறார். தற்போது அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும், வெளியுறவு பாதுகாப்பில் துணைச் செயலாளராக பணியாற்றி நாட்டின் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவலின் தலைமைக்கு கீழ் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 

பிரதமர் மோடிக்கு நியமிக்கப்பட்ட தனிச்செயலாளர்களிலே இவர்தான் மிகவும் இளையவர் ஆவார். 2016ம் ஆண்டு பீமல்சன்யால் நினைவு விருது சிறந்த பயிற்சி அதிகாரியாக செயல்பட்டதற்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது சிறப்பான பணி காரணமாக இவர் கடந்த 2022ம் ஆண்டு முதல் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். 

மிகவும் இளவயது:

பிரதமர் மோடிக்கு ஏற்கனவே தனிச்செயலாளர்களாக விவேக்குமார் மற்றும் ஹர்திக் சதீஷ்சந்திரா சிங் பணியாற்றி வருகின்றனர். ஐஎஃப்எஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் இவர் பிரதமரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget