மேலும் அறிய
Honey Garlic Cauliflower : இனிப்பு கொஞ்சம்..புளிப்பு கொஞ்சம்..ஹனி கார்லிக் காலிஃபிளவர் செய்வது எப்படி?
Honey Garlic Cauliflower Recipe : கடைகளில் கிடைக்கும் சூப்பர் சைட் டிஷ்ஷான ஹனி கார்லிக் காலிஃபிளவரை இனி வீட்டிலே செய்யலாம்.

ஹனி கார்லிக் காலிஃபிளவர்
1/6

தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் - 1, மைதா - 1/2 கப், சோளமாவு - 2 மேசைக்கரண்டி , மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 2 தேக்கரண்டி, எண்ணெய், , பூண்டு - 2, வெங்காயம் - 1 நறுக்கியது, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, வினிகர் - 2 தேக்கரண்டி, தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி, தேன் - 2 மேசைக்கரண்டி, வெங்காயத்தாள்
2/6

செய்முறை : சுடு தண்ணீரில் காலிஃபிளவரை போட்டு 5 நிமிடம் வேகவைத்து ஆராவிடவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
3/6

பிறகு காலிஃபிளவரை மாவில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிஃபிளவரை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
4/6

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து மிளகாய் தூள், மிளகு தூள், சில்லி பிளேக்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
5/6

அடுத்து சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு சோளமாவு சேர்த்து கலந்துவிடவும்.
6/6

அதில் பொரித்து வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து கிளறிவிடவும். கடைசியாக தேன், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான ஹனி கார்லிக் காலிஃபிளவர் ரெடி.
Published at : 15 May 2024 12:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement