மேலும் அறிய
Mushroom Pulao:ஹெல்தி லன்ச் பாக்ஸ் ரெசிபி; காளான் புலாவ் எப்படி செய்வது?
Mushroom Pulao: காளன் புலாவ் எப்படி செய்வது என்று இங்கே காணலாம்.

காளான் புலாவ்
1/6

அரிசியை கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் நெய் ஊற்றி, நெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும்.
2/6

மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் சிறிதளவு மாறும் வரை வதக்கவும்.
3/6

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அடுத்து நறுக்கிய காளான்களை சேர்த்து கலந்து விட்டு உப்பு சேர்க்கவும். காளான் மற்றும் வெங்காயத்தை 10 நிமிடம் வதக்கவும்.
4/6

பிறகு ஊறவைத்த அரிசியை போட்டு கலந்துவிடவும். 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் கலந்த தேங்காய் பால் சேர்க்கவும்.
5/6

இப்போது உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். குக்கரை மூடி ஆவி வர ஆரம்பித்ததும் குக்கர் விசிலை போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும். 1 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
6/6

சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும். சூடான சுவையான காளான் புலாவ் தயார்.
Published at : 08 Jun 2024 06:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion