மேலும் அறிய

மொத்த கன்ட்ரோலும் எங்க கிட்ட.. பாகிஸ்தானுக்கு மட்டும் இல்ல.. உலக நாடுகளுக்கே மெசேஜ் சொன்ன இந்தியா

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் இருந்து இந்தியாவை பாதுகாத்ததில் பல ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, Integrated Counter-UAS (Unmanned Aircraft System) Grid (ட்ரோன்கள்), S 400 Triumf system ஆகியவை பயன்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா தெளிவான மெசேஜ் சொல்லி இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரே நேரத்தில் 9 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி அளித்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மேற்கு மற்றும் வடக்கு எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது இந்தியா. தன்னுடைய வான் எல்லையை தற்காத்து கொண்டது மட்டும் அல்லாமல் மொத்த கன்ட்ரோலும் தன்னிடம் இருப்பதை பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா, இதன்மூலம் தெரிவித்திருக்கிறது.

விரைவாகவும் முப்படைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு பின் இருக்கும் தயார் நிலை ஒரு நாளில் சாதிக்கப்பட்டவை அல்ல. கடந்த 25 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக அமைந்துள்ளது.

இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள்:

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் இருந்து இந்தியாவை பாதுகாத்ததில் பல ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, ஆளில்லா விமானங்களை அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் Integrated Counter-UAS (Unmanned Aircraft System) Grid (ட்ரோன்கள்), S 400 triumf system (ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏவுகணைகள்), Barak 8 (இந்தியா - இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய ஏவுகணைகள்), Akash (DRDO தயாரித்த உள்நாட்டு ஏவுகணை), ஆளில்லா விமானங்களை அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் (DRDO தயாரித்தவை) ஆகியவை பெரிய அளவில் பயன்பட்டன.

தன்னை தற்காத்துக் கொண்டது மட்டும் இல்லாமல் விரைவாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தி இருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் மண்ணில் புகுந்து லாகூரில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் HQ-9 ஏவுகணைகளை தாக்கி அழித்தது. முக்கியான ரேடார் அமைப்புகளை காலி செய்துள்ளது.

இந்தியா சொல்ல வரும் மெசேஜ் என்ன?

தயாராக இருந்து இந்தியா திருப்பி அடித்தது ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல. கடந்த 25 ஆண்டுகளாக இந்திய வான் பாதுகாப்பு அமைப்பினை பலப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளே காரணம்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ரூ. 35,000 கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து S 400 triumf system (நிலத்தில் இருந்து வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை) 5 ஸ்க்வாட்ரான்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், 3 ஸ்க்வாட்ரான்களை பாகிஸ்தான், சீன நாடுகள் உடனான எல்லையில் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.

Barak 8 எனப்படும் நிலத்தில் இருந்து வானுக்கு சென்று தாக்கும் மீடியம் ரேஞ் ஏவுகணைகளை (MR-SAM) கடந்த 2017ஆம் ஆண்டு, மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கியது. 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான Barak 8 ஏவுகணைகள்தான், பஞ்சாப் பதிண்டா முன்கள ராணுவ தளத்தை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது.

உள்நாட்டில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட Akash ஏவுகணைகளும் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள்.

தன்னுடைய வான் எல்லையை தற்காத்து கொண்டது மட்டும் அல்லாமல் மொத்த கன்ட்ரோலும் தன்னிடம் இருப்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா தெரிவித்திருக்கிறது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget