400 முக்கியமில்லை! ஜிம்பாப்வேயில் மிரட்டிய தென் ஆப்பிரிக்க கேப்டன்! முச்சதம் அடித்து புதிய சாதனை!
வெளிநாட்டு மண்ணில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோரையும் முல்டர் படைத்தார், இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் ஹனிப் முகமது 1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 337 ரன்கள் எடுத்து இருந்தார்.

புலவாயோவில் நடைபெற்றும் வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்து சாதனைப்படைத்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பிரையன் லாரா.
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்:
தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது
இரண்டாவது டெஸ்ட்:
இந்த் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. 24/2 என்கிற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி தடுமாறிய போது அணியின் புதிய கேப்டனான வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்காம் சரிவிலிருந்து மீட்டனர். பெடிங்காம் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முல்டர் முச்சதம்:
நேற்றைய முதல் நாளிலே சதம் மற்றும் இரட்டை சதத்தை கடந்து பல சாதனைகளையும் படைத்தார், கேப்டனாக களம் இறங்கிய முதல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான 2014 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 115 மற்றும் 141 ரன்கள் குவித்திருந்ததார். அந்த சாதனையை ஒரே இன்னிங்ஸ்சில் முல்டர் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கேப்டன் முதல் போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள்
- 264* - (SA) vs ZIM, புலவாயோ 2025
- 256 - விராட் கோலி (IND) எதிராக AUS, அடிலெய்டு 2014
- 244 - கிரஹாம் டவ்லிங் (NZ) v IND, கிறிஸ்ட்சர்ச் 1968
- 232 - கிரேக் சேப்பல் (AUS) v WI, பிரிஸ்பேன் 1975
- 212 - அல்லைஸ்டர் குக் (ENG) v BAN - சிட்டக்காங் 2010
நீளும் சாதனை பட்டியல்
இதுமட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் என்கிற சாதனையையும் முல்டர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஹசிம் ஆம்லா 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 311 ரன்கள் அடித்திருந்தார்.
வெளிநாட்டு மண்ணில் தனிநபர் ஒருவரின் அதிகப்பட்ச ஸ்கோரையும் முல்டர் படைத்தார், இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் ஹனிப் முகமது 1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 337 ரன்கள் எடுத்து இருந்தார்.
அதிவேகமாக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் என்கிற சிறப்பையும் முல்டர் பெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக முச்சதம்:
வீரேந்தர் சேவாக் - 278 பந்துகள் (2008).
வியான் முல்டர் - 297 பந்துகள் (2025)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தனிநபர் ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் இங்கே.
பிரையன் லாரா – 400* – 582 பந்துகள் – இங்கிலாந்து – 2004
மேத்யூ ஹேடன் - 380 - 437 பந்துகள் - ஜிம்பாப்வே - 2003
பிரையன் லாரா - 375 - 538 பந்துகள் - இங்கிலாந்து - 1994
மஹேல ஜெயவர்தனே – 374 – 572 பந்துகள் – தென்னாபிரிக்கா – 2006
வியான் முல்டர் - 367* - 334 பந்துகள் - ஜிம்பாப்வே - 2025
கேரி சோபர்ஸ் – 365* – பதிவு செய்யப்படவில்லை – பாகிஸ்தான் – 1958
இன்று இரண்டாம் நாள் மட்டுமே ஆகிய நிலையில் பிரையன் லாராவின் அதிகப்பட்ச டெஸ்ட் ஸ்கோரான 400 தாண்ட சுலபமாக வாய்ப்பு இருந்தும், கேப்டனாக தானே டிக்ளேர் செய்தது பலரும் அவரது சுயநலம் இல்லா எண்ணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.





















