Student Death: தோல்வி பயத்தில் தற்கொலை! +2 மாணவி விபரீத முடிவு! RESULT பார்த்து அதிர்ந்த பெற்றோர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவரது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் நாடு முழுவதும் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இச்சூழலில், இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதமாக உள்ளது. முன்னதாக தேர்வு முடிவுகள் பயத்தால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகள் ஆர்த்திகா நேற்று தற்கொலை செய்துகொண்டார். இவர் பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தவர்.
இதனிடையே தான் இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவி ஆர்த்திகா தேர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அந்த மாணவி தமிழ்- 72, ஆங்கிலம்- 48, இயற்பியல் 65, வேதியியல்-78, தாவரவியல் 70, விலங்கியல் - 80 மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் தேர்வு முடிவை பார்த்ததும் உயிரை விட்ட மாணவியின் ஒட்டுமொத்த குடும்பமும் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






















