கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhita
சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து 2வது திருமனம் செய்துக்கொண்ட நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாக சைதன்யா சமந்தா இருவரது வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். கோலாகலமாக நடந்த இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2021 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்தை அறிவித்தார்கள். அவர்களின் இந்த பிரிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என பலர் விலகிச் சென்றாலும் இந்த விவாகரத்து புகைந்துகொண்டே இருக்கிறது. விவரகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் நடிப்பு பணியில் பிஸியாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில்தான் அரிய வகை ஆட்டோ இம்யூன் பாதிப்பான மயோசிட்டிஸ் என்ற பாதிப்பால் சமந்தா அவதிப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு மீண்டு வந்தார். தற்போது உடல்நிலை தெரிய சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மறுபக்கம் நடிகர் நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' புகழ் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா இருவருக்கும் இடையே காதல், அடிக்கடி இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள், ஒன்றாக வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்று வருகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் சோஷியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாகி வந்தது. இருப்பினும் இந்த வதந்தி குறித்து இரு தரப்பினரும் மௌனமாகவே இருந்து வந்தனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை ஷோபிதாவுக்கு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது சோபிதா கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் அதை பற்றி அவர்கள் தரப்பில் இருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை. கர்ப்பமாக இருப்பதால் தான் சோபிதா வெளியில் வரும்போது loose ஆன உடைகளில் வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இது கிசுகிசுவா அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















