லிப் டூ லிப் முத்தம்.. நான் அந்தமாதிரி பொண்ணு இல்லைங்க.. சம்யுக்தா ஹெக்டே விளக்கம்
தோழியில் திருமணத்தில் கோமாளி பட நடிகை கொடுத்த உதட்டு முத்தம் சர்ச்சையாக மாறியுள்ளது.

கோமாளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் தேள், பப்பி, மன்மதலீலை போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துள்ள மற்ற மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது தோழி திருமணத்தில் கலந்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
தொடர் சர்ச்சை
படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் சம்யுக்தா சமீபத்தில் தனது தோழி திருமணத்தில் பங்கேற்றார். அப்போது தோழி மணமேடையில் இருந்த போது அவரை பார்த்த மகிழ்ச்சியை பகிரும் விதமாக தோழிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார். உதட்டில் முத்தம் கொடுத்தும் வாழ்த்தும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை சம்யுக்தாவை நீங்கள் லெஸ்பியனா என்றும் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சம்யுக்தா இதுதொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார்.
அந்தமாதிரி பொண்ணு கிடையாது
சம்யுக்தாவிடம் நீங்கள் ஏன் அப்படி முத்தம் கொடுத்தீர்கள் என்றும் நீங்கள் பெண் ஈர்ப்பாளரா என்றும் கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோவும் வைரலான நிலையில், நடிகை சம்யுக்தா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் கொடுத்த முத்தத்திற்கு பின்னால் அதீத அன்பும், நட்பு மட்டுமே இருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் நான் அந்தமாதிரி பொண்ணு என்று நினைக்க வேண்டாம். அவர் என் உயிர் தோழி, அதனால் தான் அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து கூறினேன் என தெரிவித்துள்ளார்.





















