Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
இவர் பைத்தியமா அல்லது பைத்தியம் போல் நடிக்கிறாரா என்று கேட்கும் அளவிற்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அது என்ன தெரியுமா.?

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இவர் எல்லாம் ஒரு பாதுகாப்பு அமைச்சரா என கேட்கும் அளவிற்கு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், இந்திய ட்ரோன்களை இடைமறிக்காமல் விட்டதற்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப். அப்படி என்ன கூறினார் அவர்.? பார்க்கலாம்...
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் தேர்வு பாகிஸ்தானிடம் உள்ளது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் நடத்திய ட்ரோன் தாக்குதல், சூழலை மோசமாக்கிது. மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 15 இடங்களில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை இடைமறித்த பின்னர், ஜம்மு மற்றும் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா முறியடித்தது.
பாகிஸ்தானின் பல இடங்களை குறி வைத்து தாக்கிய இந்திய ட்ரோன்கள்
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக வியாழக்கிழமை மாலை லாகூரில் இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் பஹாவல்பூர் உள்ளிட்ட பல பாகிஸ்தான் நகரங்களில் இந்தியாவின் ட்ரோன் தாக்குதல்கள் நடந்த நிலையில், சைரன்கள் ஒலித்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பாகிஸ்தான் விமானப்படையின் AWACS (வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நிகழ்ந்தது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் தற்குறித்தனமான விளக்கம்
இந்த நிலையில், இந்தியாவின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்கத் தவறியது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்திய ட்ரோன்கள், நமது வான் பாதுகாப்பு அமைப்பை உளவு பார்ப்பதற்குத்தான் வந்தன. ஆனால், முதலில் நாங்கள் அதை இடைமறிக்கவிலைலை என்பது உண்மைதான், அது ஒரு டெக்னிக்கலான விஷயம், அது குறித்து நான் விளக்க முடியாது என்று கூறினார். பின்னர், அவை நமது(பாகிஸ்தான்) பாதுகாப்பான எல்லைக்குள் வந்தபிறகு தான் அவற்றை சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், அவற்றை தாக்கினால் நமது வான் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் இடம் இந்தியாவிற்கு தெரிந்துவிடும் என்பதால்தான் ட்ரோன்களை தாக்கவில்லை என்ற வினோதமாக விளக்கத்தை அளித்துள்ளார்.
எப்படி இருந்தாலும், இந்தியா அனுப்பியது தற்கொலை ட்ரோன்கள் தான். அதை வீழ்த்தாவிட்டாலும், அதுவே அந்த இடத்தில் விழுந்து வெடிக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு பாதுகாப்பு அமைச்சரின் பதிலா இது என்று கேட்கும் அளவிற்கு ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார் கவாஜா ஆசிப். ஆனால், இவர் இதுபோன்று பேசுவது இது முதல் முறை அல்ல.
அடிக்கடி இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக்கொள்வதே இவரது வாடிக்கையாக உள்ளது. நேற்று மற்றொரு பேட்டியில் பேசும்போது, இந்தியாவின் ரஃபேல் உள்ளிட்ட 5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரம் கேட்டபோது, அது இந்தியாவில் சமூக வலைதளங்களில் உள்ளதாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவரை நம்பி பாகிஸ்தான் எப்படி தான் போருக்கு துணிந்ததோ தெரியவில்லை.!!





















