போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து சேப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 57 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டி பாதியிலேயெ நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் போட்டிகள் நடத்தினால் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக பாகிஸ்தான் மீது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டன் அமைச்சரிடம் கூறியுள்ளார்.



















