சினிமா குக்கிங் ஷோ மாதிரி ஆகிடுச்சு...ஓப்பனாக பேசிய நடிகர் சித்தார்த்
Actor Siddharth : சினிமா என்பது ஒரு குக்கிங் ஷோ போல் ஆகிவிட்டது என நடிகர் சித்தார்த்தின் கருத்து சமூக வலைதளத்தில் கவனமீர்த்து வருகிறது

3BHK வெற்றிக் கொண்டாட்டம்
ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் , சரத்குமார் , தேவயானி , மீதா ரகுநாத் நடித்துள்ள படம் 3பி.எஹ்.கே. கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிய இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று. வருகிறது. ஒரு எளிய குடும்பம் சொந்த வீடி வாங்குவதற்கு எதிர்கொள்ளும் சவால்களை ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் வித்தில் சொல்கிறது இப்படம். தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்களிடையேவும் இந்த படம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சித்தா படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று ஹைதராபாதில் நடைபெறும் நிகழ்ச்சியில் படக்குழு கலந்துகொள்கிறார்கள்.
சினிமா குக்கிங் ஷோ மாதிரி ஆகிவிட்டது
சித்தா படத்திற்கு பின் சித்தார்த் நடிப்பு ரசிகர்களால் இந்த படத்தில் பாராட்டப்படுகிறது. இந்தியன் 2 படத்திற்கு பின் கடுமையான ட்ரோல்களை சந்தித்தார் சித்தார்த். அடுத்தடுத்து வெளியான மிஸ் யு , டெஸ்ட் ஆகிய படங்களும் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. நேர்காணல்களில் சித்தார்த் பேசும் கருத்துக்களும் தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்த விமர்சனங்களுக்குப் பின் சித்தார்த் தற்போது நிகழ்ச்சிகளில் கவமாகவும் தெளிவாகவும் பேசி வருகிறார். நேர்காணல் ஒன்றில் சித்தார்த் தனது நடிப்பு பற்றியும் சினிமா பற்றியும் பேசியுள்ள கருத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது
" தினம் தினமும் கற்றுக்கொள்வது தான் என் நோக்கம். என்னுடைய கலை என்பது என்னுடைய ஷூ மாதிரி. அதற்கு நான் தினமும் பாலிஷ் போட்டுக் கொண்டே இருப்பது தான் என் வேலை. என் ஷூ நன்றாக பாலிஷ் போட்டிருக்கிறது என்று இயக்குநர் சொல்ல வேண்டும். ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பே அந்த படத்தை பற்றி பேசுவது என்பது விவரிப்பதற்கு ரொம்ப கடினமானது . மற்றவர்களுக்கு இது பொழுதுபோக்கு ஆனால் எனக்கு இது பொழப்பு. சினிமா என்பது ஒரு உணவு விடுதி மாதிரி நீங்கள் போய் ஒரு உணவை சாப்பிடலாம் ஆனால் இதை எப்படி செய்தீர்கள் என்றால் சொல்ல மாட்டார்கள். அதுதான் கிச்சனுக்குள் நடக்கும் மேஜிக். அது ஒரு போர்க்களம் மாதிரி. ஆனால் சினிமா இப்போது குக்கிங் ஷோ மாதிரி ஆகிவிட்டது. இந்த டேஸ்ட் எப்படி வந்தது என உடனே கேட்கிறார்கள். ஒரு படத்தை முதல் தடவை பார்ப்பதற்கு முன் அந்த படத்தில் நடிகர்கள் என்ன கஷ்டப்பட்டார்கள் என்பது ரசிகர்களுக்கு தேவையே இல்லாதது. படத்தில் என்னுடைய கதாபாத்திரம் தெரிந்தால் எனக்கு போதும்" என சித்தார்த் பேசியுள்ளார்.





















