மேலும் அறிய
Corn Pakoda Recipe: சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ்; கார்ன் பக்கோடா ரெசிபி!
Corn Pakoda Recipe: குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி சுவையான கார்ன் பகோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்

கார்ன் பக்கோடா ரெசிபி
1/6

தேவையான பொருட்கள்: ஸ்வீட் சோளம் - 1 (வேகவைத்தது), வெங்காயம் - 2 நறுக்கியது , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கறிவேப்பிலை நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி , காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , சீரக தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி , கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, கடலை மாவு - 1 கப் (250 மி .லி) அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி , கொத்தமல்லி இலை நறுக்கியது, தண்ணீர், எண்ணெய்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்
3/6

அதன் பின், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
4/6

அடுத்து கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்துவிடவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.
5/6

கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்து வைத்த மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
6/6

பொரித்து எடுத்த கானை ஒரு பிளேட்டில் பரிமாறினால் சுவையான கார்ன் பகோடா தயார்.
Published at : 16 Jun 2024 01:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement