வனிதா எப்போதும் பொய் பேசுவார்.. விஜயகுமார், மஞ்சுளா சோத்துக்கு இல்லாதவங்களா? பயில்வான் ரங்கநாதன் ஆவேசம்
வனிதா விஜயகுமார் நிறைய பொய்களை பேசுவார் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் விஜயகுமார். இவரது மனைவி மறைந்த நடிகை மஞ்சுளா. இந்த தம்பதியின் மகள்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவரும் ராபர்ட் மாஸ்டரும் இணைந்து நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வனிதாவிற்கு பொய் ஒன்றும் புதியது அல்ல:
வனிதா விஜயகுமார் குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, வனிதா விஜயகுமார் எப்போதும் நிறைய பொய்களை பேசுவார். அவரது குடும்ப விவகாரத்திலும், சினிமா விஷயத்திலும் நிறைய பொய்களை பேசியுள்ளார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ராபர்ட் நன்றிக்கடனுக்காக நடித்துக் கொடுத்தார். ஆனால், ப்ரமோஷனுக்கு அவர் வரவே இல்லை. கதாயநாயகனான ராபர்ட்டே வரவே இல்லை. வழக்கமான சண்டை என்று வனிதா கூறிவிட்டார். மாற்றி, மாற்றி பேசுவது வனிதாவிற்கு ஒன்று புதியது இல்லை.

எகோ மியூசிக் முழுக்க முழுக்க இளையராஜாவுடையது. அதில் கூட்டாளிகளாக பலர் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதில் ஒருத்தன் நிறைய பணத்தை எடுத்துட்டு போயிட்டான். அதுனாலதான் அவர் தனியா உரிமம் கேட்க ஆரம்பித்தார்.
சோத்துக்கு இல்லாதவங்களா?
விஜயகுமாரும், மஞ்சுளாவும் சோத்துக்கு இல்லாதவங்களா? வனிதா விஜயகுமார் எப்படி இளையராஜா வீட்டில் வளர முடியும்? இளையராஜாவிற்கே 2 மகன்கள், ஒரு பொண்ணு இருக்காங்க. இளையராஜா வீட்டில் ஒரே ஒரு பெண் சாமியார்தான் இருந்தாங்க. அவங்களும் இறந்துட்டாங்க. விஜயகுமார் ரஜினி, சிவாஜியை வச்சு படம் எடுத்தவரு. அப்படிப்பட்டவரு இளையராஜா வீட்டில் தன் மகளை இருக்க விடுவாரா?
விஜயகுமார் - மஞ்சுளா பொண்ணை வளக்க இளையராஜா அவ்ளோ பெரிய மனசுக்காரரா? அவரு தன் சொந்த தம்பி மகன்கள் மீது அன்பு காட்ட மாட்டாரு. பிரேம்ஜி கல்யாணத்துக்கு இளையராஜா போனாரா? இளையராஜா அவருண்டு, அவரு வேலையுண்டுனு இருப்பாரு. கங்கை அமரன் இளையராஜாவை பொன் போல பாத்துக்கிட்டாரு.
அருவருப்பு:
விஜயகுமார் சாதாரண ஆளு இல்லை. நிறைய படம் நடிச்சவரு. மஞ்சுளாவும் பெரிய நடிகை. நிறைய சொத்துக்கள் இருக்கு. இளையராஜா வீட்டில் வனிதா விஜயகுமார் வளரனும்னு என்ன அவசியம்? பொய்க்கு ஒரு எல்லை கிடையாதா? என் சினிமா அனுபவத்துல இளையராஜா வனிதா விஜயகுமாரை பார்த்து மருமகளேனு கூப்பிட்டதா நான் கேட்டதே இல்லை.
எந்த மகனாவது தன் காதலியிடம் நீ என்னை காதலிக்கிறியா? அல்லது என் அப்பாவை காதலிக்கிறியா? என்று கேட்பானா? இது அருவருவப்பான வார்த்தை. வனிதா தந்தை விஜயகுமாரையும், அம்மா மஞ்சுளாவையும் எவ்ளோ கேவலமா பேசுனாங்க. விஜயகுமார் - மஞ்சுளா உயிரோட இருக்குறப்ப வனிதாவையே மகள் இல்லை என்று சொல்லிட்டாங்க. இளையராஜா வனிதா மீது பொறுமை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அனுமதி வாங்கிவிட்டால் இளையராஜா ஏன் வழக்குப் போட போகிறார்? இளையராஜா எழுதி கொடுத்தாரா? சோனி எழுதி கொடுத்த உரிமம் செல்லாது. விஜயகுமாரே வனிதா பொய் சொல்லும்னு சொல்லுவாரு. இளையராஜா சொல்வதில் என்ன தவறு? கார்த்திக் ராஜா மீது அப்படி ஒரு புகார் சொல்வதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்து கடந்த 11ம் தேதி வெளியான படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் இளையராஜாவின் சிவராத்திரி பாடல் இடம்பெற்றிருக்கும். இதையடுத்து, இளையராஜா தனது இசையில் வெளியான இந்த பாடலை தனது உரிமம் இல்லாமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் பெரும் பூதாகரத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில்தான் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.





















