எங்க தலையவே சைட் அடிக்கிறியா..ஷாலினி மேடம்கிட்ட சொல்லட்டா..இணையத்தில் வைரலாகும் அஜித் வீடியோ
Ajith Kumar : வெளிநாட்டுப் பெண் ஒருவர் நடிகர் அஜித் குமாரை ஓரக்கண்ணால் பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ரேஸ் டிராக்கில் கலக்கும் அஜித் குமார்
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது ரேஸ் டிராக்கில் கலக்கி வருகிறார். ஐரோப்பிய GT4 கார் ரேஸ் பந்தையத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி கலந்துகொண்டு போட்டியிட்டு வருகிறது. சில நாட்கள் முன்பு இத்தாலியில் நடந்த போட்டியின் போது அஜித்தின் கார் விபத்திற்கு உள்ளனது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித காயங்களும் இல்லாமல் தப்பினார் அஜித். இந்த ஆண்டு அக்டோபர் வரை முழுக்க முழுக்க கார் பந்தையங்களில் அஜித் கவனம் செலுத்த இருக்கிறார்.
படப்பிடிப்பிற்கு தயாராகும் ஏகே 64
மறுபக்கம் அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் மாபெரும் வசூல் வெற்றியைத் தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் அஜித்தின் 64 ஆவது படம் தயாராக இருக்கிறது. ரோமியோ பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். லப்பர் பந்து படத்தில் கவனமீர்த்த சுவாசிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் அடுத்தடுத்து இணைய இருக்கிறார்கள்.
அஜித்தை சைட் அடித்த வெளிநாட்டுப் பெண்
தற்போது அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அஜித்தை வெளி நாட்டுப் பெண் ஒருவர் கண்கொட்டாமல் சைட் அடிக்கிறார். வீடியோவைப் பார்த்த அஜித் ரசிகர்கள் 'எங்க தலையவே சைட் அடிக்கிறியா' என கேப்ஷனிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
எவ்ளோ தெரியும் இருந்தா தலைய சைட் அடிப்ப ஷாலினி mam கு மட்டும் தெரிஞ்சது
— Dharshan S (@DharshanS945325) July 25, 2025
😎😂😂🔥🔥
Wait for few more seconds ❤️😍
#Ajithkumar #AjithKumarRacing pic.twitter.com/vVaOb5837I





















