உங்க படம் ஓடல..என்னைப் பார்த்து ஏன் இந்த பொறாமை..நடிகர் சாந்தனுவை வரம்பு மீறி திட்டிய வாட்டர்மெலன் ஸ்டார்
நடிகர் சூர்யாவுடன் வாட்டர்மெலன் ஸ்டாரை ஒப்பிட்டு பேசியதை நடிகர் சாந்தனு கண்டித்த நிலையில் சாந்தனுவை விமர்சித்து வாட்டர்மெலன் ஸ்டார் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது

சூர்யாவுடன் vs வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
நடிகர் சூர்யாவின் கஜினி பட காட்சியை செய்து இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். இவர் தொழிமுறையாக பிசியோதெரபிஸ்ட் மருத்துவராகவும் இருந்து வருகிறார். தான் நன்றாக நடிப்பதாக நம்பி தன்னைப் பற்றி அதீத பெருமை பேசுவதால் யூடியுப் சேனல்கள் இவரை ட்ரோல் மெட்டிரீயலாக பயன்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் சூர்யாவின் கருப்பு பட டீசரில் கஜினி படத்தின் வாட்டர்மெலன் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவையும் வாட்டர்மெலன் ஸ்டாரையும் திவாகரையும் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் மீம்ஸ் பரவி வந்தனர். இதனை கண்டித்து இந்த மீமை நீக்கச் சொல்லி நடிகர் சாந்தனு பதிவிட்டிருன்ந்தார். இயக்குநர் வெங்கட் பிரபு இந்த பதிவை ரீபோஸ்ட் செய்திருந்தார். இதனால் கடுப்பான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இணையத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
என்னைப் பார்த்து ஏன் இந்த பொறாமை
வாட்டர்மெலன் ஸ்டார் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் அவர் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இந்த வீடியோ பதிவு நடிகர் சாந்தனு மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு. என்னையும் சூர்யாவையும் ஒப்பிட்டு போட்ட பதிவை நீக்கச் சொல்லி சாந்தனு பதிவிட்டிருந்தார். நான் உங்களிடம் கேட்கிறேன். என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். என்னைப் பார்த்து ஏன் இந்த பொறாமை. நான் ஒரு டாக்டர் மற்றும் நடிகர். நான் நடிகனாகலாம் ஆனால் உங்களால் டாகடராக முடியாது. சூர்யா சாரை விட எந்த விதத்தில் நான் குறைந்துவிட்டேன். உங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை. நீங்களே பெயிட் ப்ரோமோஷன் தான் செய்து வருகிறீர்கள். நடிப்பு என்கிற பிரம்மாஸ்திரத்தை வைத்து நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நடிப்புத் துறையில் ஏன் பெரியவர்கள் சின்னவர்கள் என்கிற தாழ்வு மனப்பாண்மையை கொண்டு வருகிறீர்கள் . சாந்தனு உங்கள் அப்பா பாக்கியராஜ் எடுத்த உடனே பெரிய இயக்குநராகிவிட்டாரா. சின்ன சின்னதாக வளர்ந்து தான் வந்தார். கீழே இருந்து ஒருத்தர் மேலே வளர்ந்து வரக்கூடாதா. சிவாஜி கணேசனையே ஏசிய உலகம் இது. என்னை சும்மா ஒன்றும் அடுத்த சிவாஜி கணேசன் என்று சொல்லவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நான் வாட்டர்மெலன் சாப்பிடுவது பிடித்துப் போய் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். சூர்யாவை விட பெரிய ஸ்டாராக நான் உருவெடுக்கலாம். " என அவர் இந்த வீடியோவில் பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் ரசிகர்கள் திணறிவருகிறார்கள்.
சாந்தோம் அண்ணா 😂😂 @imKBRshanthnu
— Sonia Vimal (@NameisSoni) July 26, 2025
எவ்ளோ கழுவி ஊத்துனாலும் ஒரு மனுஷனுக்கு இந்தளவுக்கு confidence இருக்கணும்னு நெனச்சு ஐயோ பாவம் பொழச்சு போட்டும் எல்லாரும் விட்டா.
over confidence ல ஆடிட்டு இருக்கு. 😂🤦♀️
twitter பேர use பண்ணிட்டான். சந்து பவர் தெரில போல.. தெரிய வச்சிருவோம்.… pic.twitter.com/eK9erJKLDs




















