மேலும் அறிய
Carrot Paratha: ருசியான கேரட் பராத்தா செய்து அசத்துங்க! ரெசிபி எப்படி?
ருசியான கேரட் பராத்தா செய்வது எப்படி என்று காணலாம்.

சப்பாத்தி
1/5

என்னென்ன தேவை? கோதுமை மாவு - இரண்டு கப் இளஞ்சூடான நீர் - ஒரு கப் நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் ஸ்டஃப்பிங் கேரட் - 5 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1 மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
2/5

கோதுமை மாவில் உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். மாவு நன்றாக ஸ்டாஃப்டாக இருக்கும்.
3/5

ஸ்டஃப்புங்கிற்கு கேரட்டை தோல் சீவி நன்றாக துருவி வைக்கவும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் அதோடு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
4/5

தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்,
5/5

தயிர் உடன் சூடான கேரட் பராத்தா நல்ல காம்பினேசன். சுவைத்து சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு தயிர் உடன் சிறிது தேன் சேர்த்து இனிப்பாக வைக்கலாம்.
Published at : 29 Sep 2024 01:30 PM (IST)
Tags :
Carrot Parathaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement