Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
விராட் கோலியின் அண்ணன் மகன் ஆர்யவீர் கோலி சுழற்பந்துவீச்சாளராக கிரிக்கெட் உலகில் கால்தடம் பதிக்கிறார்.

கிரிக்கெட்டின் அரசன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. தற்போது டெஸ்ட், டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.
கிரிக்கெட் வீரராக களமிறங்கும் கோலியின் மகன்:
விராட் கோலிக்கு விகாஸ் கோலி என்ற அண்ணன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஆர்யவீர் கோலி என்ற மகன் உள்ளார். 15 வயதான ஆர்யவீருக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதீத காதல் இருந்து வந்தது. தனது சித்தப்பாவை போல கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அவர் தற்போது தனது சித்தப்பா விராட் கோலி போல கிரிக்கெட்டில் நுழைந்துள்ளார்.

ஆனால், விராட் கோலி போல பேட்ஸ்மேனாக அல்லாமல் ஒரு சுழற்பந்துவீச்சாளராக களத்தில் இறங்கியுள்ளார். அதுவும் லெக் ஸ்பின்னராக களத்தில் இறங்கியுள்ளார். அவர் டெல்லி ப்ரீமியர் லீக்கின் இரண்டாவது சீசனில் ஆட உள்ளார். தற்போது அதற்காக நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார். இந்த முகாமில்தான் கடந்த ஐபிஎல் தொடரில் அசத்திய ப்ரியன்ஷ் ஆர்யா, திக்வேஷ் ரதி ஆகிய முக்கிய வீரர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆர்யவீர் எப்படி?
ஆர்யவீர் கோலியின் பயிற்சியாளர் சரண்தீப்சிங் கூறியதாவது, இளம் வீரர் ஆர்யவீர் கோலி மிகவும் கடினமான உழைப்பாளி பந்துவீச்சாளர். அவர் இந்தியாவின் பேட்டிங் சூப்பர்ஸ்டார் கோலி என்ற குடும்ப பெயரை அவர் சுமக்கவில்லை. தன்னுடைய கடின உழைப்பே அவருக்கு அணியில் இடம் பெற்றுத் தந்தது என்றும் பாராட்டியுள்ளார்.
தனது அண்ணன் மகன் ஆர்யவீர் கோலிக்கு விராட் கோலி தனது பாராட்டுகளை தெரிவித்திருப்பார் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் குடும்ப பின்னணியில் இருந்து வந்த வீரர்கள் யாரும் பெரியளவில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்தது இல்லை. அதை ஆர்யவீர் கோலி மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வாழ்த்து:
லெக் ஸ்பின்னராக வாய்ப்பு பெற்றுள்ள ஆர்யவீர் கோலிக்கு வரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியின் அண்ணன் மகன் ஆர்யவீர் கோலிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு வாமிகா என்ற மகளும், ஆகாய் கோலி என்ற மகனும் உள்ளனர்.



















