Karthigai Deepam: கர்ப்பத்தை கலைக்க சந்திரகலா சதி.. கார்த்திக் மீது விழப்போகும் திருட்டுப்பழி - கார்த்திகை தீபத்தில் இன்று
ரோகிணியின் கர்ப்பத்தை கலைக்க சந்திரகலா பப்பாளியை கொடுக்க முயற்சித்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கர்ப்பத்தை கலைக்க சந்திரகலா திட்டம்:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை ஊர் தலைவர் பதவிக்கு தேர்தலில் நிற்க சொல்லிய நிலையில், இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சந்திரகலா சாமுண்டீஸ்வரியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும், சிவனாண்டியை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறாள்.
அடுத்து மயில்வாகனம் ரோஹிணிக்கு சத்தான பொருட்களை கொடுத்து பார்த்து கவனித்து கொள்ள சந்திரகலாவுக்கு சந்தேகம் உருவாகிறது. பிறகு பப்பாளி பழத்தை கொடுத்து கர்ப்பத்தை கலைக்க திட்டமிட ரேவதி இடையில் புகுந்து ஆட்டத்தை கலைக்கிறாள்.
கார்த்திக் மீது திருட்டுப் பழி:
அதன் பிறகு சந்திரகலா கார்த்தியை சிக்க வைக்க திட்டமிடுகிறாள், வீட்டில் இருந்து பணத்தை ஒரு பையில் எடுத்து செல்கிறாள். ரேவதி இதை எதார்ச்சையாக பார்த்து விடுகிறாள்.
அடுத்த நாள் காலையில் வீட்டில் பணம் இல்லாததால் கார்த்திக் தான் அந்த பணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று பழி போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















