72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை... தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியது எதற்காக?
கூட்டாய்வுக்குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்பிக்கும்.

தஞ்சாவூர்: பொதுமக்கள் உணவு பொருட்களின் தரம் சார்ந்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசு வாட்ஸ் அப் புகார் எண்.94440 42322, செயலி (App) TNFSD. : மின்னஞ்சல் unavupukar.fsda@tn.gov.in C சமூக வலைதள செயலிகளை அறிமுகப்படுத்தி புகார் கிடைக்கப்பெற்ற 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் நடைமுறையை செயல்படுத்தி வருகிறது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், வணிகர் சங்கம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், வணிகர் சங்கம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவர்களுடன் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: எண்ணெய்யை மீண்டும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள உணவகங்கள். தயாரிப்பு நிறுவனங்கள், உணவு விநியோகம் செய்யும் விடுதிகளில் மேற்படி எண்ணெயை RUCO திட்டத்திற்காக FSSAI -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பயோ டீசல் தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக சேகரம் செய்யப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுற்றுப்புறங்களில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் பொருட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு மேற்படி சட்டத்திற்கு புறம்பாக குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு வணிகம் செய்யும் அனைத்துஉணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் அவசியம் பெற்றிக்கப்பட வேண்டும். உணவு வணிகர்களுக்கு கூட்டங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் டீக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. .
இதேபோல் சூடான உணவு பொருட்களை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் மடித்து தரக்கூடாது. உணவுகளில் செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது. பழைய உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து சூடு செய்து விற்பனை செய்யக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தக் கூடாது. உணவகங்கள் பேக்கரி கடைகளுக்கு அருகே உள்ள சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டமலமிடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று வணிகம் செய்யும் வணிகர்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படயுள்ளது.
இவ்விருதிற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். அவ்விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் தலைமையிலான நியமன அலுவலர் உள்ளடங்கிய குழுவினர் பரிசீலனை செய்து, கூட்டாய்வுக்குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்பிக்கும். அதன் பின்னர், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தேர்ந்தெடுக்கும்.
பொதுமக்கள் உணவு பொருட்களின் தரம் சார்ந்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசு வாட்ஸ ப் புகார் எண்.94440 42322, செயலி (App) TNFSD. : மின்னஞ்சல் unavupukar.fsda@tn.gov.in C சமூக வலைதள செயலிகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பெறப்படும் புகார்களுக்கு, புகார் கிடைக்கப்பெற்ற 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை மரு.விஜயலலிதாம்பிகை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















