மேலும் அறிய
Hair Care : கோடையில் ஏற்படும் முடி உதிர்தலை குறைக்க இந்த உணவுகளை டயட்டில் சேருங்க!
Hair Care : கோடையில் முடி உதிர்தலை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலை காணலாம்.

ஆரோக்கியமான உணவு
1/6

வால் நட்ஸ், பாதாம் , பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் ஒமேகா-3, புரதச்சத்து மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்
2/6

அவகேடோவில் வைட்டமின் சி, கே, ஈ, பி6, பொட்டாசியம், ஃபோலேட், போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தை சாப்பிட்டால் 20-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. அடிக்கடி அவகேடோ சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.
3/6

முடி உதிர்வை குறைக்க கீரை சிறந்த உணவாகும். இரும்பு சத்து குறைபாட்டினால் முடி உதிர்தல் ஏற்படுகின்றன. கீரை வகைகளில் இரும்பு அதிகமாக இருப்பதால், அதை தினசரி உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
4/6

பீட்டா கரோட்டின் கொண்ட இனிப்பு உருளைக்கிழங்கு முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை பளபளப்பாக்கும்
5/6

முடி வளர்வதற்கு கால்சியம் அவசியம். பால், தயிர்,சீஸ் போன்ற பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் பி-12, புரதம், இரும்பு , கால்சியம் போன்றவை முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
6/6

கிட்னி பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலையில் உள்ல துத்தநாகம், இரும்பு, பயோட்டின் மற்றும் ஃபோலேட் ஆகியவை தலைமுடியை பராமரிக்க உதவுகின்றன.
Published at : 08 May 2024 11:10 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement