மேலும் அறிய

புறநகர் ரயில் தாமதம்... வந்தே பாரத் பிடிக்க தண்டவாளத்தில் ஓடிய பயணிகள்! அதிர்ச்சி சம்பவம்

பேசின்பிரிட்ஜ்–சென்னை சென்ட்ரல் புறநகர் பாதையில், கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்கள் 30-40 நிமிட தாமதமாக இயங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் புறநகர் ரயிலின் தாமதத்தால் பயணிகள் வந்தே பாரத் ரயிலை பிடிக்க தண்டவாளத்திலேயே நடந்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பேசின்பிரிட்ஜ்–சென்னை சென்ட்ரல் புறநகர் பாதையில், கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்கள் 30-40 நிமிட தாமதமாக இயங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இதன் காரணமாக, சென்னை புறநகர் நிலையத்தின் மூன்று பிளாட்பார்ம்கள் காலியாக நிறுத்தப்பட்ட ரேக்குகளுக்காக பயன்படுத்தப்பட்டதுதான் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை–கூடுர் மார்க்கத்தில் ரயில் சேவைகள், காவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் ரத்து செய்யப்பட்டதால், அந்த ரேக்குகள் பிளாட்பார்ம்களில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் சென்னை–ஆரக்கோணம் பாதையில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நேற்று(14.08.25) பிற்பகல் 1.45 மணிக்கு, அரக்கோணம்-சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் பேசின்பிரிட்ஜ் வந்தது. 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு அருகில் வந்து, சிக்னல் காத்துக் கொண்டே நின்றது. ஏற்கனவே 15 நிமிடம் தாமதமாக வந்திருந்த ரயில், 2.20 மணி வரை அங்கு நின்றது.

இந்நிலையில், 2.05 மணியளவில் சுமார் 50 பயணிகள், வந்தே பாரத் ரயிலை பிடிக்க அவசரமாக வண்டியில் இருந்து இறங்கி, ரயொஇல் பாதையில் ஓடி சென்ட்ரல் நிலையத்தை அடைந்தனர். அந்த வந்தே பாரத் ரயில் 2.15 மணிக்கு புறப்பட இருந்தது. பெரும்பாலானவர்கள் ஆவடி, பெரம்பூர் இடையே புறநகர் ரயிலில் ஏறி திருப்பூர், கோயம்புத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆவடி சேர்ந்த 45 வயது பயணி ஒருவர், “ரயில் ஆவடியில் ஏற்கனவே 15 நிமிடம் தாமதமாக வந்தது. 1.50 மணிக்குள் வந்திருந்தால், 2.05 மணிக்கு வந்தே பாரத்தில் ஏறியிருப்பேன். ஆனால் 20 நிமிடம் நிலையத்திற்கு வெளியே நின்றதால் பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார்.

மற்றொரு பயணி,அதிக லக்கேஜ் வைத்து இருந்ததால் ரயில் பாதையில் நடக்க முடியாமல், வந்தே பாரத்தை தவறவிட்டார். அவர், “புறநகர் ரயில்கள் இப்போது இணைப்பு ரயில்களை சரியான நேரத்தில் பிடிக்க முடியாமல்” என்று கூறினார்.

ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் நோக்கி செல்லும் ரயில்களை வந்து செல்ல வெறும் இரண்டு பிளாட்பார்ம்களே இருந்தன. ரேக்குகளை யார்டில் வைக்காமல் பிளாட்பார்ம்களில் வைத்ததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர், மேலும் இது குறித்து தெற்கு ரயில்வேயில் இருந்து எந்த அதிகார்வப்பூரவ தகவலும்  வெளியிடப்படவில்லை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget