Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: பிரதமர் மோடி பொய் பேசுவதை நோயாக கொண்டிருப்பதாக, செமி கண்டக்டர் விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Cong Slams MODI: செமி கண்டக்டர் தொடர்பான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பிரதமர் மோடி குற்றச்சாட்டு:
செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, “ செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) ஆலைகளை அமைப்பது குறித்த விவாதங்கள் பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும், அவை ஒருபோதும் நிறைவேறவில்லை. குறைக்கடத்தி தொழிற்சாலையை உருவாக்குவதற்கான ஆரம்ப முயற்சி சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையிலேயே கொல்லப்பட்டது. நான் எந்த அரசாங்கத்தையும் விமர்சிக்க செங்கோட்டையில் இல்லை. ஆனால் நாட்டின் இளைஞர்கள் இதை அறிந்திருக்க வேண்டும். குறைக்கடத்தி தொழிற்சாலை என்ற யோசனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. ஆனால், வடிவம் பெறுவதற்கு முன்பே அது அழிக்கப்பட்டது. நாம் 50-60 ஆண்டுகளை இழந்தோம்” என பேசினார். இதன் மூலம் இந்தியாவின் குறைகடத்தி துறையை ஆரம்பிக்காமலேயே காங்கிரஸ் அழித்துவிட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
”பொய்யர் மோடி”
பிரதமர் மோடியின் உரையை குறிப்பிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மிஸ்டர் மோடி எவ்வளவு மோசமான பொய்யர் என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. சண்டிகரில் நிறுவப்பட்ட செமிகண்டக்டர்ஸ் காம்ப்ளக்ஸ் லிமிடெட் 1983 இல் செயல்படத் தொடங்கியது” என குறிப்பிட்டுள்ளார். இதனை பகிரும் காங்கிரஸ் கட்சியினர், நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் செய்து வருகிறார் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
One more example of what a pathological liar Mr. Modi is. Semiconductors Complex Ltd established in Chandigarh started operations in 1983. https://t.co/TQ0lTlAjZb
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 15, 2025
மிரட்டப்படும் ஆலைகள்:
செமிகண்டக்டர் விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது, ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அண்மைக்காலமாக அவர் வெளியிட்ட குற்றச்சாட்டுகளில், “குறைக்கடத்தி உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து ஒதுக்கீடு செய்வதில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சாதகமாக இருக்கிறது. அரசாங்கம் நான்கு முக்கிய குறைக்கடத்தி முன்மொழிவுகளை அங்கீகரித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்காக திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன அல்லது நிபந்தனைகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா ஆலைக்கான ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தின் விண்ணப்பம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தெலங்கானாவிற்காக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட இரண்டு திட்டங்கள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு திட்டத்திற்கு குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய ஒப்புக்கொண்ட பின்னரே பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா? இந்தியாவை வலிமையாக்கும் மாநிலங்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும்” என ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.





















